இந்தோனேஷியா சிறைச்சாலையில் தீ : 41 கைதிகள் உயிரிழப்பு!

இந்தோனேஷியா சிறைச்சாலையில் தீ : 41 கைதிகள் உயிரிழப்பு!

ந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவுக்கு அருகில் உள்ளது தங்கெராங் (Tangerang) சிறைச் சாலை. இங்கு போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப் படும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகக் கைதிகளை கொண்ட சிறைச்சாலையான இங்கு, இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். இருந்தும் இந்த விபத்தில் 41 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். 70 பேர் லேசான காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள டாங்கெராங் சிறைச்சாலையின் பிளாக் சி யில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை அலுவலர்கள் ஆராய்ந்து வருவதாக சட்ட அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரிகா அப்ரியந்தி கூறினார்.

1,225 கைதிகள் தங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட டாங்கெராங் சிறையின் கட்டுப்பாட்டிற்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கலாம் எனவும் ரிகா கூறினார்.தற்போது தீ ஏற்பட்ட சி பிளாக்கில் 122 குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இங்கு பற்றியெரிந்த தீ சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கட்டுக்குள் வந்தது.

இந்தத் தீவிபத்து ஏற்பட்டபோது கைதிகள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தனர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

error: Content is protected !!