இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

ந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), தென் பிராந்தியம் (MD), 2025 ஆம் ஆண்டிற்கான பல்வேறு பயிற்சி நிலைகளில் 200 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. கிடைக்கும் பதவிகளில் டிரேட் அப்ரண்டிஸ், டெக்னீசியன் அப்ரென்ஸ் மற்றும் கிராஜுவேட் அப்ரென்டிஸ் ஆகியவை அடங்கும்.

பணியிடங்கள் விவரங்கள்:

டிரேட் அப்ரென்டிஸ்:
காலியிடங்கள்: 55
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொடர்புடைய துறையில் ITI முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 18-24 வயது

டெக்னீசியன் அப்ரென்டிஸ்:
காலியிடங்கள்: 25
கல்வித் தகுதி: தொடர்புடைய பொறியியல் துறையில் டிப்ளோமா
வயது வரம்பு: 18-24 வயது

கிராஜுவேட் அப்ரெண்டிஸ்:
காலியிடங்கள்: 120
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம்
வயது வரம்பு: 18-24 வயது

சம்பளம்

அனைத்து பதவிகளுக்கும் IOCL விதிமுறைகளின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

பணியிடம்:

தென் மண்டலம்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் IOCL அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை (கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம்) சரிபார்த்து சரியான தகவல்களுடன் பதிவு செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு வெளியான தேதி: 16 ஜனவரி 2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16 பிப்ரவரி 2025
ஆவண சரிபார்ப்பு: விண்ணப்ப காலக்கெடுவிற்குப் பிறகு அறிவிக்கப்படும்
இறுதி முடிவு: பின்னர் அறிவிக்கப்படும்

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முதற்கட்ட தேர்வு நடைபெறும். பின்னர் ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தகுதி பரிசோதனைகளும் நடைபெறும்.

மேலும் தகவலுக்கு:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ  இணைய தள அறிவிப்பைப் பார்வையிட்டு, ஆன்லைன் விண்ணப்ப இணைப்புகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இது ஒரு மத்திய அரசு பணி. இதனைப் பெற ஆர்வம் செலுத்தும் நபர்கள் தெளிவாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து அதில் குறிப்பிட்டுள்ள தகுதியை நீங்கள் பெற்றிருந்தால் உடனடியாக விண்ணப்பித்து இந்த பணியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். நீங்கள் அரசு வேலையை பெற நமது ஆந்தை ரிப்போர்ட்டர் மூலமாக உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.

error: Content is protected !!