சிங்காரச் சென்னை நகரில் 18 சாலைகள் குப்பையில்லா பகுதியாக அறிவிப்பு!

சிங்காரச் சென்னை நகரில் 18 சாலைகள் குப்பையில்லா பகுதியாக அறிவிப்பு!

சென்னை மாநகராட்சியால் 66 கி.மீ நீளமுடைய 18 சாலைகளில் குப்பையில்லா பகுதிகள் என அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

இந்த சாலைகளில் 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மைப் பணியாளர்கள் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் தூய்மைப்பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 222 குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 52 வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறன்றன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும்,

உர்பேசர் மற்றும் சுமீத் நிறுவனத்தின் சார்பில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும், சென்னை என்விரோ நிறுவனத்தின் சார்பில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.39 ஆயிரம் அபராதம் வசூல்

இந்நிலையில் குப்பையில்லா பகுதிகள் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் சாலைகளில் குப்பைகளை கொட்டிய தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி ரூ.39 ஆயிரம் அபராதம்வசூலிக்ககப்பட்டுள்ளது.

அந்த 18 சாலைகளின் விபரம் வருமாறு:–

1.திருவொற்றியூர் நெடுஞ்சாலை, 2. மணலி காமராஜர் சாலை, 3. மாதவரம் ஜி.என்.டி. ரோடு, 4. ரெட்ஹில்ஸ் சாலை, 5. தண்டையார்பேட்டை – திருவொற்றியூர் நெடுஞ்சாலை, 6. ராயபுரம்– பூந்தமல்லி நெடுஞ்சாலை, 7. திரு.வி.க.நகர் பெரம்பூர் நெடுஞ்சாலை (தெற்கு), 8. அம்பத்தூர் – ரெட்ஹில்ஸ் சாலை, 9. அண்ணா நகர் – பூந்தமல்லி நெடுஞ்சாலை, 10. தேனாம்பேட்டை கத்தீட்ரல் சாலை, 11. டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, 12. கோடம்பாக்கம் – தியாகராயா சாலை, 13. பூந்தமல்லி நெடுஞ்சாலை, 14. வளசரவாக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை, 15. ஆலந்தூர்– ஜி.எஸ்.டி. சாலை, 16. அடையாறு – எலியட்ஸ் கடற்கரை சாலை. 17. பெருங்குடி – இராஜீவ் காந்தி சாலை, 18. சோழிங்கநல்லூர் – ராஜீவ் காந்தி சாலை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

error: Content is protected !!