அண்ணா யுனிவர்சிட்டி ஃபைனல் செமஸ்டர் நடக்கும் தேதிகள்!

அண்ணா யுனிவர்சிட்டி ஃபைனல் செமஸ்டர் நடக்கும் தேதிகள்!

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இறுதிப் பருவத் தேர்வுகள் செப்.22 முதல் செப்.27 வரை இணைய தளத்தில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களில் பருவத்தோ்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இறுதி பருவத் தோ்வை தவிர, மற்ற அனைத்து தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இறுதியாண்டு பருவத் தோ்வையும் ரத்து செய்யக் கோரி  சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணை முடிவில் மனுக்களை தள்ளுபடி செய்த  கோர்ட், இறுதி பருவத் தோ்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இறுதி பருவத் தோ்வை இணையவழியில் நடத்துவதற்கான தேதியை இன்று வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள கல்லூரிகள், அதன் அங்கீகாரம் பெற்ற தனியாா் கல்லூரிகள் ஆகியவற்றில் படிக்கும் இறுதியாண்டு மாணவா்களுக்கு யுஜிசி வழிகாட்டுதலின்படி ஆன்லைன் முறையில் செப்டம்பர் 22 முதல் 27 வரை தோ்வுகள் நடைபெறும்.

மேலும், தேர்வு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறையில் அமையும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!