பப்ஜி கேம் மீண்டும் இந்தியாவில் மலரப் போகுதா?

பப்ஜி கேம் மீண்டும் இந்தியாவில் மலரப் போகுதா?

இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமான இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தொடர்பாக சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இதை அடுத்து இந்தியாவில் செயலியை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நிறுவனம் அரசுடன் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கல்வான் மோதலையடுத்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து வருகிறது. ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்தது. பப்ஜி கேம் தென் கொரிய நிறுவனத்தை சார்ந்தது என்றாலும், சீனாவின் Tencent Games நிறுவனம்தான் இதனை இந்தியாவில் வெளியிடுவதற்கான உரிமையை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் பப்ஜி விளையாட்டை வெளியிடுவதற்கு Tencent நிறுவனத்துக்கு அளித்த உரிமையை ரத்து செய்வதாக தென்கொரிய நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா விற்கான அனைத்து வெளியீட்டு பொறுப்புகளும் PUBG Corporation நிறுவனத்தால் மேற் கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளது. இந்திய பயனர்களுக்கு கேமிங் அனுபவத்தை விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அரசுடன் இணைந்து செயல்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

இதனை Tencent நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், ‘இந்தியாவை தவிர மற்ற உலக நாடுகளில் PUBG Corporation உடனான எங்கள் உறவு பாதிக்க ப்படவில்லை’ என்று கூறியுள்ளது. இதனால் இந்தியாவில் மீண்டும் பப்ஜி செயலி பயன் பாட்டுக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பப்ஜி நிறுவனம் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் இனி எடுக்கப் போகும் நடவடிக்கைகளை பொறுத்தே இதுதொடர்பான கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என தகவல் வருகின்றன்

Related Posts