32°C
விளம்பரம்
Advertisement

டிடிவி தினகரனின் தம்பி பாஸ்கரன் புது கட்சி ஆரம்பிச்சாச்சு!

admin சேலம் Published: September 15, 2018 2 நிமிட வாசிப்பு Updated: September 17, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நம்ம தமிழ்நாடு என்றில்லை இந்தியா முழுக்க நாளுக்கு நாள் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சி தொடங்குவது, புதிதாக அரசியலில் களமிறங்கி அரசியல் கட்சி ஆரம்பிப்பது என மாநிலத்தில் கட்சிகளின் எண்ணிக்கைக்குப் பஞ்சமில்லை.. அந்த வகையில் அண்ணா எம்ஜிஆர் மக்கள் கழகம்’என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ள டிடிவி தினகரனின் தம்பியும், நடிகருமான பாஸ் (எ) பாஸ்கரன், மோடிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜெ. மறைவுக்குப் பின்னர் அதிமுக-வில் ஏற்பட்ட விரிசல் காரணமால சசிகலா ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். சசிகலா சிறை சொன்ற பின்னர் தினகரன் மற்றும் திவாகரனுக்கு ஏற்பட்ட மோதலால் ‘அண்ணா திராவிடர் கழகம்’என்ற கட்சியை தொடங்கினார் திவாகரன். சசிகலா குடும்பத்தில் ஏற்கனவே இரண்டு கட்சிகள் உள்ளா ரிலையில் தற்போது ‘அண்ணா எம்ஜிஆர் மக்கள் கழகம்’என்ற கட்சியை பாஸ் தொடங்கியுள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இன்று(செப்டம்பர் 15) புதிய கட்சியை துவங்கி கொடியை பாஸ் அறிமுகம் செய்தார். கட்சிக்கு அண்ணா எம்ஜிஆர் மக்கள் கழகம் என்று பெயர் வைத்திருக்கிறார். கொடியில், மேலே காவி, நடுவில் பச்சை, கீழே கருப்பு வண்ணத்தில், நடுவில் எம்ஜிஆர் படம் இடம்பெற்றுள்ளது.

கட்சியையும், கொடியையும் அறிமுகம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எம்ஜிஆர் அண்ணா வழியில் ஊழலற்ற நிர்வாகத்தை தரவே கட்சி ஆரம்பித்துள்ளேன். எம்ஜிஆர் தொண்டர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தவே எனது இயக்கத்தை கட்சியாக அறிவித்துள்ளேன்.  ஆகஸ்ட் 30ஆம் தேதி கட்சி துவங்க திட்டமிட்டிருந்தேன் ஆளும் கட்சியினர் பதற்றமடைந்து அந்த மாநாட்டிற்குப் பல இடையூறுகள் கொடுத்தனர். இதனால் மாநாடு நடைபெறவில்லை. அப்பொழுது நடைபெறவிருந்த சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த துரைராஜ்-ஜான்சி திருமணத்தை இன்று எனது நீலாங்கரை வீட்டில் நடத்தி வைத்தேன்.

இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி யார் செய்ய நினைத்தாலும் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவேன். நாங்கள் நிர்வாகத்திற்கு வந்தால் தனி தனி துறைக்கு நிதி ஒதுக்குவோம். 15 வருடம் குஜராத்தில் முதல்வராகவும், 4 வருடம் இந்திய பிரதமராக இருக்கும் மோடி மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.மீண்டும் மோடியை பிரதமராக்கப் பாடுபடுவேன். ஊழலற்ற இந்தியாவின் இறையாண்மையை காக்கும் மோடிக்கு எனது முழு ஆதரவு” என்று தெரிவித்தார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்