அமேசான் அடாவடி செய்யுது! – பார்லிமெண்ட் கமிட்டி முன் ஆஜராக மறுப்பு!

அமேசான் அடாவடி செய்யுது! – பார்லிமெண்ட் கமிட்டி முன் ஆஜராக மறுப்பு!

தகவல் பாதுகாப்பு மசோதா அதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி விசாரணைக்கென அமேசான் நிறுவனப் பிரதிநிதியை அக்டோபர் 28ஆம் தேதி ஆஜராகும்படி அழைப்பு ஆணை அனுப்பியது. அதனை ஏற்று விசாரணைக்கு ஆஜராக அமேசான் நிறுவனம் மறுத்துவிட்டது.

தகவல் பாதுகாப்பு மசோதா பரிசீலனைக்கு என நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்தக் கமிட்டி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் பிரதிநிதிகளை விசாரணைக்காக அக்டோபர் 28ஆம் தேதி ஆஜராகும் படி கேட்டுக் கொண்டது. ஆனால் அந் நிறுவனத்தின் பிரதிநிதிகள் விசாரணைக்கு ஆஜராக இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் தகவல் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்ற எம்பிக்கள் கமிட்டியின் தலைவராக உள்ள பாஜக எம்பி மீனாட்சி லேகி அரசுக்கு பரிந்துரை ஒன்றை எம்பிக்கள் கமிட்டி அனுப்பும் என்று கூறினார்

அந்த பரிந்துரையில் அமேசான் நிறுவன பிரதிநிதிகள் எம்பிக்கள் விசாரணைக் கமிட்டி முன் ஆஜராவதற்கு தேவையான நிர்பந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அரசை எம்பிக்கள் கமிட்டி வேண்டிக்கொள்ளும் என கூறினார்.

பேஸ்புக் நிறுவனத்தின் ஒன்றில் பிரிவு தலைவர் அன்றி தாஸ் வெள்ளிக்கிழமையன்று எம்பிக்கள் கமிட்டி முன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அவரை எம்பிக்கள் கமிட்டி உறுப்பினர்கள் துருவித் துருவி கேள்வி எழுப்பினர்.

வரும் அக்டோபர் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி டுவிட்டர் நிறுவனத்துக்கு எம்பிக்கள் கமிட்டி அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அக்டோபர் 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கூகுள் மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

Related Posts

error: Content is protected !!