ஆன்லைன் கல்வி வியாபாரி பைஜூஸ் கம்பெனி காலியாகிப் போச்சு!

ஆன்லைன் கல்வி வியாபாரி பைஜூஸ் கம்பெனி காலியாகிப் போச்சு!

ம் நாட்டில் புகழ்பெற்ற எட்டெக் நிறுவனம் பைஜூஸ். 2011-ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கிய பைஜூஸ், இன்றைய கல்வி உலகில் மாபெரும் நிறுவனம். கரோனா காலத்தில் இந்நிறுவனம் பெரும் வளர்ச்சியடைந்தது. இதன்காரணமாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் இடம்பித்தார் இதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரன். அன்று கோடிகளில் புரண்ட பைஜூஸ் கடந்த சில மாதங்களாக ஊழியர்கள் பணி நீக்கம், வருவாய் இழப்பு, கடன் சுமை, அடுத்தடுத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விலகல் என கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.முன்னதாக இந்நிறுவனம் 9000 கோடி வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக கிளம்பிய விவகாரத்தில் சிக்கியதும் நினைவிருக்கும்

தற்பொழுது பணவசதி இல்லாத எட்டெக் நிறுவனமான பைஜூஸ் நாடு முழுவதும் உள்ள அதன் அனைத்து மாநில விற்பனை அலுவலகங்களையும் காலி செய்துள்ளது. இந்நிறுவனம் பெங்களூருவில் உள்ள நாலெட்ஜ் பார்க்கில் உள்ள ஐபிசியில் (IBC Knowledge Park in Bengaluru) தனது தலைமையகத்தை மட்டும் விட்டுவிட்டு அனைத்து அலுவலகங்களையும் காலி செய்துள்ளது.

பைஜூஸ், பேடிஎம் என 2 நிறுவனங்களின் வீழ்ச்சி, இந்திய தொழில்துறையில் தற்போது பெரு கவனம் பெற்றுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மத்தியில் கவலைக்குரிய பாடமாகவும் இவை மாறி வருகின்றன. இவற்றில் கொரோனா காலத்தில் உச்சம் தொட்டிருந்த பைஜூஸ் எஜூ-டெக் நிறுவனம் படிப்படியாக சரிந்து தற்போது தலைக்குப்புற வீழ்ந்திருக்கிறது. ஒரு காலத்தில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலிருந்த பைஜூஸ் தற்போது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட வழியின்றி தள்ளாடுகிறது.

பைஜூஸ் நிறுவனம் பெரும் பண நெருக்கடியை எதிர்கொள்வதால், கடனாளிகளுடன் தகராறில் இருப்பதால், மறுசீரமைப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களாக இதுவே நடந்து வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, நிறுவனம் அதன் மதிப்பீட்டிலும் நெகட்டிவையே பெற்றுள்ளது. அதனால் நிறுவனம் பண நெருக்கடியை எதிர்கொள்வதால் கடந்த ஆறு மாதங்களாக சரிவர ஊழியர்களுக்கும் ஊதியங்களை வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. இதையடுத்து பெங்களூரு தலைமை அலுவலகம் தவிர்த்து இதர கிளைகள் அனைத்தையும் காலி செய்ய தற்போது உத்தரவிட்டிருக்கிறது. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாதது குறித்து ஏற்கனவே வருத்தம் தெரிவித்து வந்த பைஜூஸ், தற்போது 14 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பணியாற்ற உத்தரவிட்டிருக்கிறது.

நிறுவனத்தில் சுமார் 15,000 ஊழியர்கள் உள்ளனர். இந்த ஊழியர்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். இருப்பினும், நாடு முழுவதும் உள்ள பைஜூவின் 300 டியூஷன் மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்ந்து அலுவலகத்திற்குச் செல்வார்கள். நாட்டில் உள்ள அனைத்து பிராந்திய விற்பனை அலுவலகங்களையும் மூட பைஜூவின் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜுன் மோகன் உத்தரவிட்டுள்ளார்.கடந்த ஆண்டு செப்டம்பரில், பைஜூஸ் சுமார் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்திருந்தது, இது அர்ஜுன் மோகனின் மறுசீரமைப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாகும். மிருணாள் மோஹித்துக்குப் பதிலாக அர்ஜுன் மோகன் இந்திய வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பைஜூஸ் நிறுவனம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. 2022 இல், நிறுவனம் 2,500 பேரை பணிநீக்கம் செய்தது.இதனிடையே பைஜூஸ் சரிவு இதர எஜு-டெக் நிறுவனங்களையும் தொற்றுமோ என்ற கவலையில் இந்திய தொழில்துறை ஆழ்ந்துள்ளது.

error: Content is protected !!