மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்த கூட்டம்! வீடியோ

மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்த கூட்டம்! வீடியோ

பார்லிமெண்ட் மழைக்கால கூட்டத்தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில் அவையை சுமூகமாக நடத்துவது குறித்து இன்று (18-7-2021) அனைத்துக்கட்சி கூட்டம், பாராளுமன்றம் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றது.இன்றையக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ ‘பிரையன், திமுக சார்பில் திருச்சி சிவா உள்பட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.

17-ஆவது பாராளுமன்ற 6-ஆவது கூட்டத்தொடரான மழைக்கால கூட்டத்தொடர் நாளை (19-7-2021) தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்று நிறைவடைய உள்ளது. கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், நோய்தொற்றுக்கான சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தொடர் வழக்கமான நேரமான காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். கடந்த கூட்டத்தொடா்களைப் போலவே நோய்த்தொற்றுக்கான பாதுகாப்பை முன்னிட்டு சமூக இடைவெளியுடன் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மக்களவையில் தற்போதுள்ள 539 உறுப்பினா்களில் 280 போ் வழக்கமான மக்களவை இருக்கைகளிலும், மீதமுள்ள 259 போ் பார்வையாளா் மாடத்திலும் அமரவைக்கப்பட உள்ளனர். கொரோனா நோய்த்தொற்றை முன்னிட்டு இந்தக் கூட்டத்தொடரில் பார்வையாளா்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வழக்கமாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தின விழாவுக்கு முன்பாக முடிவடையும். அதுபோலவே, இந்த ஆண்டும் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பவுள்ளன.

இந்த சூழலில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று நடத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக இன்று அனைத்துக்கட்சி கூட்டம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றது. இன்றையக் கூட்டத்தில் ிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ ‘பிரையன், திமுக சார்பில் திருச்சி சிவா உள்பட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில் ‘ நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்கள், பிரச்சினைகள் குறித்து விதிமுறைப்படி, நடைமுறையின்படி ஆரோக்கியமான,அர்த்துள்ள விவாதங்களை நடத்த அரசு தயாராக இருக்கிறது என்று அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.அனைத்து தரப்பின் ஆலோசனைகள், குறிப்பாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள், அறிவுரைகள் வரவேற்கப்படுகிறது, அது சரியாக இருந்தால் பரிசீலிக்கப்படும். நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு ஒரு விவகாரத்தை, விஷயத்தை எழுப்பினால் அதுகுறித்து விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்’ எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு பிறகு திமுக மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “19 நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். கொரோனா தடுப்பூசி பிரச்னை, மேக்கேதாட்டு விவகாரம் குறித்தும் திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவர்.

மேகநாடு விவகாரத்தில் கர்நாடக முதல்வரிடம் ஒரு மாதிரியும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரிடம் வேறு மாதிரியும் பேசுகிறார்கள். மேகேதாட்டு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வரும். கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்களை விவாதத்துக்கு எடுக்காமல் விடுவதை அனுமதிக்க மாட்டோம்.

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை தொடர்பாகவும் கேள்வி எழுப்புவோம். பொருளாதார வீழ்ச்சி, விவசாய பிரச்னை உள்ளிட்ட 13 பிரச்னைகள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழ்நாடு நலன் குறித்து என்னென்ன பிரச்னைகளை எழுப்ப இருக்கிறோம் என்பதை கூட்டத்தில் தெரிவித்தோம் என்று டி.ஆர். பாலு கூறினார்.

error: Content is protected !!