ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இவ்வளவு டிமாண்ட் வர என்ன காரணம்? வீடியோ!

பெட்ரோல் விலை எகிறிக் கொண்டே போகும் சூழலில் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக், ஏத்தர், ஆம்பியர், ஹீரோ போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் போட்டி போட வருகிறது ஓலா ஸ்கூட்டர். புதிதாக வர இருக்கும் தங்கள் வாகனத்தில் 18 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். இதன்மூலம் 75 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம். முழுமையான சார்ஜ் செய்யும்போது அதிகபட்சம் 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என ஓலா தெரிவித்திருக்கிறது.400 நகரங்களில் ஒரு லட்சம் சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக ஓலா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த வாகனங்களுக்கான பெயர் முறையாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் சீரியஸ் எஸ், எஸ் 1 மற்றும் எஸ் 1 புரோ என்னும் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு ஜூலை 15-ம் தேதி தொடங்கியது. ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் வந்திருப்பதாக ஓலா நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படாத எலெக்ட்ரிக் வாகனத்துக்கு ஒரே நாளில் ஒரு லட்சம் வானங்கள் முன்பதிவு என்பது இதுவரை நடந்தது இல்லையாம்.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அருகே ஒலா எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி வாகனங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 20 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் டாப் ஸ்பீடு 95 கிமீ–க்குமேல் இருக்கும் என்கிறார்கள். அதேபோல் இதன் பிக்–அப்பும் நன்றாக இருக்கும் என்றே தெரிகிறது. வெறும் 4 விநாடிகளுக்குள் இது 40 கிமீ–யை எட்டிவிடுமாம். சிட்டிக்குள் ஓட்டுவதற்கு இந்த ஸ்கூட்டர் செம சாய்ஸாக இருக்கலாம். ஆனால், முழுமையான விவரங்களை நாம் டெஸ்ட் டிரைவ் செய்தபிறகே சொல்ல முடியும். அதை எல்லாம் விட 100% சதவிகிதம் சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை போகலாம் என்கிறார்கள்.
ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றாலே சார்ஜிங்தான் பிரச்னை. அதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறதாம் ஓலா. அதாவது, ஹைப்பர் சார்ஜர் என்றொரு ஆப்ஷனைச் சொல்கிறார்கள். இந்த ஹைப்பர் சார்ஜர் மூலம் 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 75 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என்கிறார்கள். இந்தியா முழுக்க 400 நகரங்களில் ஹைப்பர் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ இருக்கிறார்களாம். அதனால் பல தரப்பினராலும் எதிர்பார்த்த அந்நிறுவனம், வெறும் 499 ரூபாய் செலுத்தினால் ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படும். இந்த 499 ரூபாய் கூட திருப்பி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து ஒரு லட்சத்துக்கும் அதிக புக்கிங் ஆகி இருக்கிறதாம்..
இது குறித்து ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “எங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்குக் கிடைத்த வரவேற்பு எனக்குப் பெரு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா முழுவதும் இருந்து வாடிக்கையாளர்கள் பெரும் ஆதரவு கொடுத்துள்ளனர். இது இந்திய மக்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து தங்களின் கவனத்தை இ- ஸ்கூட்டர்கள் பக்கம் திருப்புகின்றனர் என்பதையே காட்டியுள்ளது. உலகம் முழுவதும் இ- ஸ்கூட்டர்களின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில் ஓலா இ- ஸ்கூட்டருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்று தெரிவித்துள்ளார்.