நடிகை சில்க் ஸ்மிதா மறைந்த தினம் இன்று

நடிகை சில்க் ஸ்மிதா மறைந்த தினம் இன்று

1960 , மர்லின் மன்றோ இறப்பதற்கு சரியாக இரண்டு வருடங்கள், ஏலுறு , ஆந்திரா பிரதேசத்தில் விஜயலட்சுமி என்ற பெயரில் டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. சிறு வயதில் குடும்ப சுழல் காரணமாக பெற்றோரால் படிப்பை நிறுத்தப் பட்டு, அறியாத வயதில் திருமணமும் செய்து வைத்தனர், கணவன் மற்றும் மாமியார் கொடுமையால், அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார் விஜயலட்சுமி. அன்றிலிருந்து அவர் வாழ்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. , தமிழகத்தை தன் கவர்ச்சியாலும், காந்த கண்களினாலும் சுண்டி இழுத்தவர் , அவர் தான் விஜயலட்சுமி என்கின்ற சில்க் சுமிதா.

silk sep 23

ஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரையும் “சில்க் ஸ்மிதா” என்று யாவராலும் அறியப்பட்ட ஒப்பற்ற சினிமா கனவுக்கன்னி 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்து 23 செம்படம்பர் 1996 இல் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்!தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தி அவர்களால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முறையாக நடித்தார் அந்த பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள் அனைத்திலும் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சில்க் ஸ்மிதா நடித்துள்ளார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்த விஜயலட்சுமி (பின்னாளில் சில்க் ஸ்மிதா). பிறப்பால் ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம் தமிழ் நாட்டின் கரூர் ஆகும். இவர் வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இவரது வசீகர தோற்றத்தின் காரணமாக பலரது தொல்லைகளுக்கு ஆளானார். இதனால் இவரது குடும்பத்தார் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். இவரது குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக இவர் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.

இவர் தனது திரைப்பட வாழ்க்கையை இரண்டாம் நிலை நடிக நடிகைகளுக்கான ஒப்பனை கலைஞராகத்தான் ஆரம்பித்தார், பின் தமிழ் நடிகரும் இயக்குனருமான வினுச்சக்ரவர்த்தியின் மூலம் ஒரு வண்டிச்சக்கரம் என்கிற ஒரு தமிழ் திரைப்படத்தில் சில்க் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் இவரை ஸ்மிதா என்கிற புது புனைப்பெயரில் அறிமுகபடுத்தினார். வினுச்சக்கரவர்த்தியின் மனைவி சில்கிற்கு ஆங்கிலம் பயிற்றுவித்தார். அதே நேரத்தில் சில்க் வேறு ஒருவரிடம் நடனமும் கற்றுகொண்டார். வண்டிச்சக்கரத்தில் நடித்தபின்பு இவரது கதாபாத்திரமான சில்க் என்கிற பெயரும் ஸ்மிதா என்கிற பெயரும் இணைந்து இவரது அடையாளம் ஆனது.

பின்னர் ஸ்மிதா “இணையே தேடி” என்கிற திரைப்படம் மூலம் 1979இல் மலையாள திரைப்பட உலகிற்கு அறிமுகம் ஆனார். வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் கிடைத்த வெற்றியினால் ஸ்மிதா புகழின் உச்சத்துக்கே சென்றார். அந்த படத்தின் அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் தாக்கத்தின் காரணமாக அவரால் வேறு விதமான வித்தியாசமான கதாபாத்திரங்கள எளிதாக பெறமுடியவில்லை. இவர் பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் சில ஹிந்தி சினிமாக்களிலும் நடித்தார். இவரது கவர்ச்சியான தோற்றத்திற்கும் மூன்று முகம் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த துணிவான கதாபாத்திரதினாலும் இவர் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய துறைகளிலும் புகழ்பெற்றார். இவரது கவர்ச்சி நடனம் மட்டுமே இடம்பெற்ற அமரன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியை ஈட்டின.

1980களில் இவரது நடனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு உயர்ந்தார்.கிறங்கவைக்கும் உடல் வனப்புக்கும் மயக்கம் தரும் பார்வைக்கும் சொந்தக்காரியாக விளங்கிய சில்க் கொஞ்சம் கொஞ்சமாக தென்னிந்தியத் திரையுலகின் கவர்ச்சி ராணியாக உருவெடுத்தார்.படம் வெற்றி பெற வேண்டுமானால் சில்க் ஸ்மிதா திரையில் தோன்றுவது அவசியம் என்ற ஒரு காலகட்டம் தென்னிந்திய சினிமாவில் இருந்தது.

இவர் நடிப்பில் பல பரிமாணங்கள் கடந்திருந்தாலும் இவரை பத்திரிக்கைகளும் சில சினிமாவும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளபடுத்தின. ஆனாலும் இவர் அலைகள் ஓய்வதில்லை(1981), நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த சில நல்ல கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என ஆணித்தரமாக நிரூபித்தார். லயனம்(1989) என்கிற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்ற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது. இந்தப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கபட்டது குறிப்பிடத்தக்கது. இவரது மற்றொரு நல்ல படமான பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மிகபெரிய வெற்றியை பெற்றது. கமலஹாசன், ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்த படம் ஹிந்தியிலும் சத்மா என்கிற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.

1996இல், ஸ்மிதா சென்னையில் அவருக்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பில் பிணமாக கண்டுபிடிக்கபட்டார். ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அறியப்பட்டார். இந்த நிகழ்விற்கு முன்பு இவர் திரைப்படத் தயாரிப்பாளராக முயற்சித்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட கடனாலும், மேலும் காதல் தோல்வியினால் ஏற்பட்ட குடிபழக்கதினால் இவர் மன இறுக்கத்திற்கு ஆளானதாக நம்பப்படுகிறது. ஆனாலும் இவரது மரணத்தினை சுற்றி பல சர்ச்சைகள் இன்றும் இருந்து வருகின்றன.

Related Posts