நடிகர் சங்க துணைத்தலைவரா கண்டினியூ பண்றேன்.. ஏன் தெரியுமா? – பொன்வண்ணன் விளக்க்ம்

நடிகர் சங்க துணைத்தலைவரா கண்டினியூ பண்றேன்.. ஏன் தெரியுமா? – பொன்வண்ணன் விளக்க்ம்

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என இரண்டு பதவிகளை வகித்து வருகிறார் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் அவருடைய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவுக்கான காரணத்தை கடிதமாக எழுதி நடிகர் சங்கத்தின் தலைவர் நாசருக்கு அனுப்பி வைத்தார். பொன்வண்ணன் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்க தென்னிந்திய நடிகர் சங்கம் மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பதவி ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக பொன்வண்ணன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”பொதுவாக அரசியல் சாயல் இல்லாமல் செயல்படுவோம் என ஆரம்பம் தொடர்ந்தே உறுதியாக உள்ளோம் சென்ற முறை நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாதென மறைந்த ஜெ பதிவுசெய்தார்., கடந்த இரண்டு வருடங்களாக மிக சிறப்பாக நிர்வாகம் செயல்பட்டு வருகிறது..

விஷால் இடை தேர்தலில் போட்டியிட்டது எனக்கு அதிர்ச்சி அளித்தது; எங்கள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் விஷால் சுயமாக முடிவெடுத்துவிட்டார். தார்மீக ரீதியாக பொதுவாக இருப்பது எங்களது அடையாளம், அந்த அடையாளத்தை இழந்து விட்டது வருத்தமளிக்கிறது. விஷாலுக்கு எனது ராஜினாமா குறித்து தெரியபடுத்த வேண்டாம் என நாசரிடம் குறிப்பிட்டேன். விஷால் அரசியல் நுழைவு குறித்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை, அவரே பதில் அளிக்க விவாதம் முன்வைத்தேன். விஷால் தரப்பில் தன்னிச்சையாக போட்டியிடுவதால் பிரச்சனை இல்லை என நினைத்தேன், இனி கவனத்துடன் செயல்படுவதாக தெரிவிக்கபட்டது. எனக்கு நிர்வாகம் சார்பில் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்திற்க்காக தொடர்ந்து செயல்படுவேன், விஷால் மட்டுமே நடிகர் சங்கம் இல்லை., எனக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… இப்போது நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும், மலேசியா சென்று சிறப்பாக கலை நிகழ்ச்சி முடித்துவிட்டு, அடுத்த ஆறு மாத காலம் நல்ல முறையில் செயல்பட வேண்டும்.

கார்த்திக், விஷால் என்னைவிட வயதில் சிறியவர்கள் நான் என்ன சொன்னாலும் கேட்கக் கூடியவர்கள். நாசர் சார் என்னைவிட மூத்தவர், நான் எது சொன்னாலும் அதை எடுத்துக்கொள்வார். நான் அவர்களை விட ஒரு படி மேல் சென்று பணியாற்ற வேண்டிய கட்டத்தில் இருப்பதினால் நான் நடிகர் சங்க துணைத் தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்றுகொண்டு நண்பர்களுடன் இணைந்து நடிகர் சங்க கட்டிடத்திற்காக என் பணியினை தொடர்ந்து செய்வேன்.

என் தனிப்பட்ட கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நடிகர் சங்க கட்டிடத்திற்காக பெரிய நடிகர்களுடன் நட்பை பெற்றும் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் உதவுவதில் மிகப் முக்கிய பங்கு உள்ளது. நடிகர் சங்கத்தில் இருப்பதில் இருந்து அரசியலுக்கு பயன்படுத்துவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை” என்று பொன்வண்ணன் கூறினார்.

Related Posts

error: Content is protected !!