நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்!?

நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்!?

கடந்த ஓரிரு வாரங்களாக சர்ச்சைக்குள்ளான நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க மாணவர் களின் கைரேகை, கருவிழி சோதனை நடத்த வசதியாக நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் என்ற முறை அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அனுமதியை பெற மத்திய அரசுக்கு தேசிய தேர்வு முகமை கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் எண் திட்டம், கட்டாயம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், படிப்படியாக கட்டாய மாக்கப்பட்டது. அரசு திட்டங்களை பெறுவதில் மற்றுமின்றி, கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை, தேர்வு போன்றவற்றுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தளங்களிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

கடந்த 2018 செப்டம்பரில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘ஆதார் இல்லை எனக்கூறி குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை மறுக்கக்கூடாது. யு.ஜி.சி, சிபிஎஸ்இ, நீட் தேர்வுகளுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது’ என்று தீர்ப்பு கூறியது. அதனால், கல்வித்துறையில் ஆதார் கட்டாயம் என்பது தற்காலிகமாக நிறுத்தப் பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து கடந்த ஜூலையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

அதன்படி, அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்பது மாற்றப் பட்டு, விருப்பத்தின் அடிப்படையிலானது என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. மேலும், மத்திய அரசின் சேவைகளையும் நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்ட நிலை யில், தனி நபர்கள் ஆதார் மற்றும் தங்களுடைய பயோமெட்ரிக் தரவுகளை தர வேண்டும். ஆனால் புதிய திருத்தத்தின் கீழ் வரும் போது, புதிய வழிமுறைகளின் படி தங்களின் அடையாளத்தை ஆப்லைனில் உறுதி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கல்வியாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதியவர்களில் சிலர் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!