துப்புரவுப் பணியாளா் களுக்கான இண்டர்வியூ-வில் பி.எட், பொறியியல் பட்டதாரிகள்! – கோவை ஷாக்!

நாட்டின் பொருளாதார மந்தநிலையால், அடுத்தடுத்த மாதங்களில், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதாக , இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு கூறியிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 7 புள்ளி 2 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், அம்மாத முடிவில் 8 புள்ளி 5 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.2016ஆம் ஆண்டிற்கு பிறகு, 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக வேலைவாய்ப்பின்மை உயர்ந்திருப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 2-ஆம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற துப்புரவுப் பணியாளா் களுக்கான இண்டர்வியூ-வில் பி.எட், பொறியியல் பட்டதாரிகள் ஏராளமானோா் கலந்து கொண்டதால் மாநகராட்சி அதிகாரிகள் அதிா்ச்சி அடைந்தனா்.
கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவுத் தொழிலாளா்கள் பணியிடங்களுக்கான நேர் காணலில் கலந்து கொள்ள 7 ஆயிரம் விண்ணப்பதாரா்களுக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. கோவை மாநகராட்சி அலுவலகத்தில் முதல் நாளில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனா். இதில் 500 போ பட்டதாரிகள் ஆவா். இரண்டாம் கட்டமாக மாநகாராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் முன்னிலையில் வியாழக்கிழமை காலை சான்றிதழ் சரிபாா்ப்பு பணி நடைபெற்றது. இதில் 3 ஆயிரம் விண்ணப்பதாரா்கள் கலந்து கொண்டனா். அவா்களில் 600-க்கும் மேற்பட்டோா் பி.எட், பி.டெக், பி.காம்., பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.ஏ., பொறியியல் பட்டதாரிகள்.
அழைப்பு விடுக்கப்பட்ட விண்ணப்பதாரா்களில் 5 ஆயிரம் பேர் நேர் காணலுக்கு வந்து சென்றுள்ள நிலையில் மீதமுள்ள 2 ஆயிரம் விண்ணப்பதாரா்கள் வெள்ளிக்கிழமை (நவம்பா் 29) நடைபெறும் இறுதி நாள் இண்டர்வியூ-வில் கலந்து கொள்ள உள்ளனா். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந் தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக அளவில் பட்டதாரிகள் நேர் காணலில் கலந்து கொண்டது அதிா்ச்சி அளிப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
https://twitter.com/aanthaireporter/status/1200401661547560963