ஜாக்டோ ஜியோ போராட்டக் குழுவிற்கு மனம் திறந்த மடல் !

ஜாக்டோ ஜியோ போராட்டக் குழுவிற்கு மனம் திறந்த மடல்  !

முதலில் அரசாங்க ஊழியர்களுக்கான ஒரு சில கேள்விகள்! அரசு ஊழியர்களின் சம்பளம், pension மற்றும் இதர சௌகரியங்களுக்காக நீங்கள் போராடுகிறீர்கள். அதை தர்ம யுத்தம் என்றும் நியாயப் படுத்துகிறீர்கள்! துரதிஷ்டவசமாக உங்கள் குழுவில் இணைந்து உள்ள பல அரசுத் துறை பணி யாளர்களுக்கு சம்பளமே கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து.வருவாய்த் துறை, தாலுக்கா அலுவலகத்திலும் போக்குவரத்துத்துறை அலுவலகத்திலும் வேலை செய்பவர்கள் உங்கள் இயக்கத்தில் சேர்ந்து போராடுகிறார்கள். என்ன ஒரு comedy!

உங்களில் எத்தனை பேர் சம்பளத்தைத் தவிர எதையும் எதிர்பார்க்காமல் வேலை செய்தி ருக்கிறீர்கள் என்பதை மனசாட்சியைத் தொட்டு சொல்ல வேண்டும் . இந்த நாடு நாசமாக போனதற்கு உங்களது அராஜக இலஞ்சம் காரணமில்லையா?. உங்கள் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் ஒரு ஏழை விவசாயிக்காக போராடியது உண்டா?

என்றைக்காவது ஒரு நாளாவது உங்கள் அலுவலகத்தின் முன் நிற்கும் கிழிந்த சட்டையுடன் வரும் நபரை ஏறெடுத்துப் பார்த்து உதவி செய்தது உண்டா? தீபாவளி, பொங்கல் அன்றைக்கு அரசாங்கம் உங்களுக்கு போனஸ் கொடுக்கும் தினம் அந்த நாளாவது நீங்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தி இருக்கிறீர்களா? உங்களுக்கான சம்பளம் அரசின் மொத்த வருமானத்தில் எத்தனை சதவீதம் என்று தெரியுமா?

அது போகட்டும் என்றைக்காவது ஒரு நாளாவது ஒரு பணியை சரியாகச் செய்து முடித்து தந்திருக்கிறீர்களா? இத்தனை குறைவான சமயம் பணி செய்கிறீர்கள் அதற்காக உங்களுக்கு தரப்படும் சம்பளம் மிக அதிகம் என்று என்றாவது உணர்ந்து இருக்கிறீர்களா?

சரி இப்போது நாம் சமாதானமாக பேசுவோம்!

உங்களுக்காக வரையறை செய்யப் பட்டிருக்கும் அந்த வேலைகளை குறிப்பிட்ட சமயத்திற்குள் செய்து முடிக்காவிட்டால் உங்களது சம்பளத்திலிருந்து ஒருபகுதியை இனி எடுத்துக் கொள்ள லாமா? இனி உங்கள் பணியை காண்ட்ராக்ட் அடிப்படையில் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா? வேலை முடிந்தால்தான் உங்களுக்கு சம்பளம்! சரியா?

இனி ஆசிரியர்களுக்கான கேள்விகள்!

நீங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்கிறீர்கள் என்று நினைத்து இன்று போராடுகிறீர்கள்! இத்தனை நாட்களில் எத்தனை மாணவர்களின் அறிவுத்திறனை நீங்கள் உயர்த்தி இருக்கிறீர்கள் என்ன சொல்ல முடியுமா? எத்தனை மாணவர்கள் உங்களால் உயர் படிப்புக்கு தகுதியடைந்தார்கள் என்று சொல்ல முடியுமா?

வகுப்பறையில் பாடம் சொல்லிக் கொடுக்காத நேரங்களில் நீங்கள் சீட்டு போடுவதில்லையா? சிறு தொழில்கள் நடத்துவதில்லையா? வட்டி வியாபாரம் செய்வதில்லையா? ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வைத்திருக்கவில்லையா? உபரி வாடகை, கடை என உங்கள் வருமானங்களைப் பெருக்கவில்லையா?

உங்களுக்கான பணி இடம் மாற்றம் வேண்டி இலட்சங்களில் அரசியல்வாதிகளுக்கு நீங்கள் கொடுத்த இலஞ்சம் எங்கிருந்து வந்தது? பள்ளி வகுப்பறையிலே சரியாக சொல்லிக் கொடுக்காமல் மாணவனை உங்களிடம் டியூசன் படிக்க வரவைக்கும் வித்தைகளை நீங்கள் கையாண்ட தில்லையா? அரசாங்கம் உங்களுக்கு கொடுக்கும் சம்பளம் ஒரு நல்ல மாணவனை உருவாக்க என்று நீங்கள் என்றைக்காவது நினைத்து பார்த்திருக்கிறீர்களா? உங்கள் மாணவன் பரிட்சையில் தோற்றதற்காக என்றைக்காவது சவாலாக எடுத்து அடுத்த முறை வெற்றி பெறச் செய்ததுண்டா?

5 1/2 வருடம் மருத்துவம் படித்தவர் சம்பளம் தன் திறமையை நிரூபிக்கும் வரை அவரது சம்பளம் உயர்ந்ததில்லை.

4 வருடம் பொறியியல் படித்தவனை நிறுவனம் efficient என்று நினைக்கும் வரை சம்பளம் உயர்ந்ததில்லை.

6 வருட படிப்பின் பின் பல வழக்குகளை வென்றால் ஒழிய ஒரு வக்கீல் தனது ஃபீஸை அதிகரிக்க முடியாது….

இப்படி ஒவ்வொரு அரசு சாரா பணியாளர் களின் நிலைமை இருக்க, அரசு ஊழியர்களே, ஒரே நாற்காலியில் வருடக் கணக்காக பெஞ்சைத் தேய்த்து, அனுபவம் என்ற ஏமாற்றுச் சொல்லை உபயோகித்து, பதவி உயர்வு, சம்பள உயர்வு, பென்ஷன் என மக்கள் பணத்தை அனுபவிக்கிறீர்களே? உண்மையிலேயே அதை வாங்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா?

வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கும் நீங்கள் ஓய்வடைந்தால் சுகமாக பொங்கித் திங்க பென்ஷன் வேண்டும் எனப் போராடுகிறீர்கள். நீங்கள் பணி செய்யாமல் இத்தனை நாள் சம்பளம் வாங்கியது உங்கள் உரிமையினால் அல்ல, மக்களின் பிச்சைப் பணத்தால்…. அந்தப் பணத்தை பெற்று மக்களுக்கு எந்தக் கடமையும் ஆற்றாத உங்களை மக்கள் மன்னிக்க மாட்டோம்….. இத்தகைய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு என்று ஒன்று இல்லாததை நீங்கள் கவனிக்க மறுப்பது ஏன்?

இப்போது சமாதானமாகப் பேசுவோம்

நாளை முதல் உங்கள் வகுப்பறையில் படிக்கும் அத்தனை மாணவனும் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறவில்லை என்றால் ஒவ்வொரு மாணவனுக்கும் இத்தனை ரூபாய் என்று கணக்கிட்டு உங்கள சம்பளத்தை குறைத்துக் கொள்ளலாமா

நீதிபதியின் அத்தனை கருத்துகளும் ஏற்புடையவை! காரணம் அந்தச் சரித்திரத்தை நீங்கள்தான், உங்கள் செயலால்தான் உருவாக்கினீர்கள்!! உங்களால் உண்மையைச் சொன்ன நீதிபதியின் மீது கோபப்பட முடியாது! அவர் இரண்டு முறை பயமுறுத்தல் செய்ததில் உடனடியாக பணிந்து போனீர்கள். அதிலிருந்தே உங்கள் பயம் தெரிகிறது.

நீங்கள் செய்யும் போராட்டம் யாருக்காக என்று யோசித்துப் பாருங்கள். உங்கள் போராட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் உங்களை தவறாக பயன்படுத்தி அரசியல் செய்கிறார்கள் என்பதை எப்போது நீங்கள் உணரப் போகிறீர்கள்?

கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் போராட்டம் என்பது உங்கள் உரிமை. ஆனால் கடமையைச் செய்யாமல் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு காசையும் மக்களாகிய நாங்கள் தான் கொடுக்க வேண்டும்.

ஆகவே நாங்கள் கொடுக்கும் ஒவ்வொரு காசுக்கும் எங்களுக்கு உங்கள் சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமையும் இருக்கிறது.சுகமான வாழ்க்கைக்கு பழகிவிட்ட அரசு ஊழியர்களே…. உழைக்காமல் பணத்தை மட்டும் உரிமையாக கேட்கும் ஆசிரியர்களே! நாளைய தினங்கள் இதைவிட அதிகமான கேள்விகளோடு மக்கள் உங்கள் முன்னே போராட ஆயுதங்களோடு வருவார்கள்!

அதற்காக உங்களை தற்காத்துக் கொள்ள இப்போதே தொடங்குங்கள்…..

நியாயமற்ற, கடமை செய்ய மறந்த ஜாக்டோ ஜியோவிற்கு எனது ஆதரவு இல்லை!

©டிமி!

error: Content is protected !!