டெஸ்லா சைபர் டிரக்குக்குப் பேரிடி!

டெஸ்லா சைபர் டிரக்குக்குப் பேரிடி!

லகமெங்கும் ஒரு சின்ன விளம்பரம் கூட இல்லாமல் மிகப் பெரிதாக விற்றுக் கொண்டிருப்பது எலான் மஸ்க்கின் எலக்ட்ரிக் வெகிக்கிள் கம்பெனியான டெஸ்லாவின் மின்சார கார்கள்தான்.அவரது லேட்டஸ்ட் காரான சைபர் டிரக் என்பதுதான் விலை உயர்ந்ததும் பெரிதும் புகழ் கொண்டதுமான EV யாக இருக்கிறது.என்னைப் போலவே உலகெங்கிலும் பலர் இந்த மின் வாகனங்களுக்கு எதிரான மன நிலை கொண்டவர்களாக இருந்தாலும் டெஸ்லாவின் புகழுக்கோ விற்பனைக்கோ எந்த குறைவும் இல்லாமல்தான் வியாபாரம் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.

ஆங்காங்கே சில மின் வாகனங்களில் பேட்டரிகள் வெடிக்கும் சம்பவங்கள் நடந்து வந்த போதிலும் அவை பெரிதாக பொருட்படுத்தப்படவே இல்லை..!ஆனால் அண்மை இரவு லாஸ் வேகாசில் உள்ள டிரம்ப் ஓட்டலின் முன் நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லாவின் சைபர் டிரக் ஒன்று வெடித்து சிதறியது. அந்த டிரக்கின் ஒவ்வொரு பேட்டரியாக பெரும் சக்தி கொண்ட வெடிகுண்டு மாதிரி வெடித்து சிதறி இருக்கிறது.

இதில் ஒருவர் இறந்திருக்கிறார்.இப்போது அமெரிக்கா முழுவதும் இந்த செய்திதான் பெரும் பேசுபொருளாகி இருக்கிறது. டெஸ்லாவின் மார்ககெட் மதிப்பும் குறிப்பிட்ட அளவு குறையத் துவங்கி இருக்கிறது.

இது வரை இந்த வெடிப்பின் இரண்டு வீடியோக்கள் வெளிவந்திருக்கின்றன. பார்க்கவே பயங்கரமாக இருக்கின்றன அந்த வீடியோக்கள். இனி அடுத்தடுத்து வெவ்வேறு ஆங்கிள்களில் இந்த வெடிப்பு பற்றிய வீடியோக்கள் வரக் கூடும்.அமெரிக்காவின் முக்கியமான நகரத்தில் முக்கியமான லேண்ட் மார்க் ஓட்டல் ஒன்றின் முன்பு சைபர் டிரக் வெடித்து சிதறிய சம்பவம் டெஸ்லாவின் விற்பனைக்கு பேரிடியாக முடியும் என்று சொல்கிறார்கள்.

நந்தன் புதிய ஸ்ரீதரன்

Related Posts