சென்ட்ரல் விஸ்டாவை விட அதிக செலவு செய்து மாநாட்டு மையம்!?

சென்ட்ரல் விஸ்டாவை விட அதிக செலவு செய்து மாநாட்டு மையம்!?

டெல்லி துவாரகாவில் யஷோபூமி சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமரக்கூடிய மாநாட்டு மையம், 15 மாநாட்டு அறைகள், பெரிய அளவிலான அரங்குகள், 13 கூட்ட அரங்குகள் ஆகியவற்றை இந்த மையம் கொண்டுள்ளது. 8.9 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி, விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த விஸ்வகர்மா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், ரூ. 27 ஆயிரம் கோடி செலவில், டெல்லி துவாரகாவில் இந்த மாநாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. அதே நேரம், புதிய பாராளுமன்றம் கட்டடம், மற்றும் முழு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் செலவு ரூ. 20,000 கோடியாக இருந்த நிலையில் , மாநாட்டு மையம் ஏன் அதை விட அதிக செலவில் காட்டப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தலைநகர் டெல்லியின் துவாரகா பகுதியில் ‘யஷோ பூமி’ என்ற பெயரில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (ஐஐசிசி) கட்டப்பட்டது. உலகத்தரத்தில் கட்டப்பட்ட இந்த மையத்தில் 15 மாநாட்டு மையங்கள், 11 ஆயிரம் பேர் அமரும் வகையிலான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி, இன்று விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு புதியதாக கட்டப்பட்ட இந்த மாநாட்டு மையத்தை (பகுதி: 1) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதனிடையே மோடியும் பாஜகவும் சேர்ந்து இந்த மாநாட்டு மையத்துக்கான ரூ. 27 ஆயிரம் கோடியில் ,ஊழல் செய்து எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பதை கண்டறிய உடனடியாக விசாரணை தேவை என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கூறியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைப் பக்கத்தில், ” தனது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரூ. 27 ஆயிரம் கோடி செலவில், டெல்லி துவாரகாவில் கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி. புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான செலவு ரூ. 862 கோடி. முழு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் செலவு ரூ. 20,000 கோடி. ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை ரூ.990 கோடி. ஆனால், புதிய பாராளுமன்ற கட்டிடம் , முழு சென்ட்ரல் விஸ்டாவை விட அதிக செலவு செய்து மாநாட்டு மையம் கட்டப்பட்ட காரணம் என்ன?

ஜி-20 மாநாட்டுக்காக ஏற்கனவே பாரத் மண்டபம் கட்டப்பட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகைக்கு மாநாட்டு மையம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன ? 2024 தேர்தல் நிதிக்காக மோடியும் பாஜகவும் சேர்ந்து இந்த மாநாட்டு மையத்துக்கான ரூ. 27 ஆயிரம் கோடியில் ,ஊழல் செய்து எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பதை கண்டறிய உடனடியாக விசாரணை தேவை” என்றுக் கேட்டுக் கொண்டுள்ளார்

error: Content is protected !!