14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை:ஒடிசா பாதுகாப்பு படை அதிரடி!
ஒடிசா மாநிலத்தில் மால்கங்கிரி மாவட்டம் சிலகோட்டா வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது, இந்நேரத்தில் பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் நக்சல்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் நக்சல்கள் பலி உயரக்கூடும் என தெரிகிறது.

நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒடிசாவில் அவ்வப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்பு படையினர் பலர் கொல்லப்பட்டுளனர். அரசியல் பிரமுகர்கள் கடத்தி கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஒடிசாவில் சத்தீஷ்கர் மாநில எல்லையில் உள்ள மால்கங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அகிலேஷ்வர் சிங் தலைமையில் சிறப்பு படையினரும், மாவட்ட தன்னார்வ படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மீது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். உடனே பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து தாக்கினார்கள். கடுமையான துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டகள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் பெண் மாவோயிஸ்ட் ஆவார்.
மேலும்அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வெடி பொருள் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் அனைவரும் மே 25-ந்தேதி சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஊர்வலத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் என்றும், அங்கிருந்து தப்பி ஒடிசா மாநிலத்தில் தலைமறைவாக இருந்தனர் என்றும் போலீஸ் டி.ஜி.பி. தேவ்தத்சிங் தெரிவித்தார்.
14 Maoists killed in encounter in Odisha
*******************************************************
At least 14 Maoists, including a woman, have been killed in a fierce encounter with police in Odisha’s Malkangiri district today, an official said.The gun battle, which lasted for several minutes, took place in a forest close to the border with Chhattisgarh. The Maoists who were killed are suspected to have been involved in the attack on a convoy of Congress leaders in Chhattisgarh in May this year.


