கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்: இந்தியா- ரஷியா முடிவு

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்: இந்தியா- ரஷியா முடிவு

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை கூட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்க இந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள இது குறித்த ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றவும் இரு நாடுகளைச் சேர்ந்த குழுவினர் தில்லியில் நேற்று முடிவு செய்தனர்.அத்துடன் மே மாதம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முழு அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது
kudankulam-plant
டெல்லியில் இந்தியா – ரஷியா நாடுகளுக்கிடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அணுஉலை, விண்வெளி ஆராய்ச்சி, எரிசக்தி மற்றும் பொருளாதாரம் போன்றவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தின. அதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், ரஷிய துணை பிரதமர் டிமிட்ரி ரோகசின் ஆகியோர் இப்பிரச்னைகள் குறித்து பேசினர்.

அப்போது, கூடன்குளத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகளை அமைப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக ஒப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்கு தீர்வு காணும் வகையில் பேச்சு நடைபெற்றது.இதில், ஏற்கனவே கூடன்குளம் அணுஉலையில் இரண்டு அணுஉலைகளைத் தொடர்ந்து, மேலும் இரண்டு அணு உலைகளை அமைப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் – மே மாதங்களில் கூடன்குளம் அணுஉலை முழு மின் உற்பத்தித் திறனை எட்டும் என்று சல்மான் குர்ஷித் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும் ஏப்ரல் அல்லது மே மாதம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முழு அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடிவு செய்திருப்பதாகவும் 2-வது அணு உலை இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிகிறது

Related Posts