மன அழுத்தத்தால் கூட மாரடைப்பு வரும்: ஆய்வில் தகவல்
உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிகரெட் பிடிப்பது போன்றவற்றால் மாரடைப்பு நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது மன அழுத்தமும் மாரடைப்பு நோய் ஏற்பட ஒரு காரணம் என தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சில நேரங்களில் கடுமையான நோய் காரணமாக மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.முன்னதாக சிறு பிரச்னைகளுக்கு கூட பெரிய அளவில் கவலைப்படுவதே மன அழுத்தத்துக்கான முதல்படி. மன அழுத்தத்தால் உடல், வேதியியல் மாற்றத்துக்கு உள்ளாகிறது. இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படும். ஒருவரின் தனித்தன்மை, முயற்சி, சக்தி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.நல்லவர்களையும் முட்டாளாக்கும்: மன அழுத்தம், நல்ல அறிவு படைத்தவர்களையும், பழக்கவழக்கம், நடை, உடை, பாவனைகளில் முட்டாள்களாக காட்டு கிறது. ஒருவருக்கு உடலளவிலும், மனதளவிலும் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. உறவினர்கள், நண்பர்களிடமிருந்து பிரியும் நிலை உண்டாகிறது.உணர்வற்ற மனிதனாக்கும்: மனித உணர்வில், பாதிப்பை உண்டு பண்ணுகிறது. தேவையில்லாத இடங்களில், தேவையற்ற உணர்வுகளை வெளிப்படுத்த வைக்கிறது. சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை பிரித்துக் காட்டுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்யாவிடில், மனநோய் அளவுக்கு கொண்டு செல்கிறது என்று சொல்லி வந்த நிலையில் மன அழுத்தத்தால் மாரடைப்பும் வரும் என்று உறுதிப் படுத்தப் பட்டுள்ளது

மாரடைப்பு என்பது ஏதோ திடீரென ஏற்பட்டு, உடனடியாக உயிரைக் குடித்துவிடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதத்துக்குள் பல்வேறு அறிகுறிகள் ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.அதாவது, இதுவரை கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை முடிந்து திரும்பிய ஏராளமான நபர்களிடம், நடத்திய ஆய்வில், ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே மாரடைப்பு ஏற்படும் வரையில் சில அறிகுறிகள் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக, மாரடைப்பு ஏற்பட ஒரு வாரத்துக்கு முன்பு, 56 விழுக்காடு மக்களுக்கு நெஞ்சு வலி, 13 விழுக்காடு மக்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம், 4 விழுக்காடு மக்களுக்கு மயக்கம், தொய்வு நிலை போன்றவை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் மன அழுத்தம் ஒருவருக்கு பல நோய்களை கொண்டு வருகிறது. 60 சதவீத மனித வியாதிகளுக்கு மன அழுத்தமே காரணம் என்றும் தற்போது மன அழுத்தமும் கூட மாரடைப்பு நோய் ஏற்பட ஒரு காரணம் என கண்டறியப் பட்டுள்ளது. இந்த மன அழுத்தத்தால் மனிதனுக்கு தலைவலி, மயக்கம், பயம், எரிச்சல், கோபம், பீதி, ஏ.டி.டி.,/ ஏ.டி.எச்.டி., போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. மன அழுத்தம் வரும்போது பற்களை கடிக்கும்போது தாடை பாதிக்கப்படுகிறது. அதனால் இதயத்துடிப்பு அதிகரித்தல், பக்கவாதம், இதயநோய்கள், ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய பாதிப்புகள் உண்டாகின்றன. செரிமானப் பிரச்னை, வயிற்று எரிச்சல், அடி வயிற்று வலி, குடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல் எடை அதிகரித்து ஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன் ஏற்படுகிறது. தசை இறுக்கம், நார்த் திசுக்கட்டி, வலி ஆகியவை கால்களில் ஏற்படுகின்றன.என்றெல்லாம் சொல்லிவந்த நிலையில் இத்தகைய மன அழுத்தமும் மாரடைப்பு நோய் ஏற்பட ஒரு காரணம் என தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் சில நேர. மனஅழுத்தத்தால் தற்கொலை எண்ணம், போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாதல், விபரீத எண்ணம், போன்ற விபரீத பழக்கவழக்கங்கள் ஏற்படுகின்றன. தூக்கமின்மை, பழக்கவழக்கத்தில் மாற்றம், உணர்வுப்பூர்வமாக மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், ஆஸ்துமா, அல்சர், சத்துக் குறைபாடு, டென்ஷன், பதட்டம், பிரமை மற்றும் பல நோய்களையும் மனஅழுத்தம் கொண்டு வரும் என்பதுடன் மாரடைப்பையும் அளிக்கும் என்று . வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பேராசிரியர்கள் ராபர்ட் எம்.கார்னே, ஜன்னத் இ பிரீடுலேண்ட் தலைமையிலான 12 குழுவினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அவசர உலகில் மனஅழுத்தம் எல்லா மனிதர் களுக்கும் ஏற்படுகிறது. என்ன பிரச்னையாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளப் பழக வேண்டும். சிறு விஷயத்துக்கெல்லாம் கவலைப்படாமல், அதை சரி செய்ய வேண்டும். சரி செய்ய முடியாத பிரச்னை எனில், அதையே நினைத்து கவலை கொள்ளக் கூடாது.

உடனடியாக சரிசெய்யுங்கள்: பிரச்னை ஏற்பட்டு மன அழுத்தம் தோன்றும் போது, எண்ணத்தை மாற்ற முற்படுங்கள். நண்பர் களுடன் மனம்விட்டு பேசுங்கள். இதனால் அழுத்தம் குறையும். எளிய உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் ஆகியவையே மனஅழுத் தத்துக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. வார இறுதி நாட்களில் புதிய இடங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் மனஅழுத்தத்தை மறந்து விடலாம்.


