ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்!- மத்திய அமைச்சரவை அனுமதி!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்!- மத்திய அமைச்சரவை அனுமதி!

யில்வே ஊழியர்களுக்கு 78 நாள் பண்டிகை கால போனஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11.56 ரெயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் எனவும் அதிகாரிகள் அல்லாத ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

Related Posts