ஒபாமா படம் போட்ட வயாக்ரா மாத்திரை விற்பனை! – பாக்.கில் பரபரப்பு!
பாகிஸ்தானின் பிரபலமான நகரம் பெஷாவர். இங்குள்ள மார்க்கெட்டில் சமீபகாலமாக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவப்படம் அச்சிடப்பட்ட வயாக்ரா மாத்திரைகள், ஜெல்கள் விற்பனையாகி வருகின்றன. ஆண்களுக்கு சக்தி கொடுக்கும் மாத்திரைகள் என்று விளம்பரப்படுத்தி இதுபோன்ற மாத்திரைகள் விற்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை போலி என்று கூறப்படுகிறது. ஒரு வயாக்ரா மாத்திரை ஒரு டாலருக்கு (ரூ.63) விற்கப்படுகிறது.

இது போன்ற வயாக்ரா மாத்திரை விற்பனைக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அங்குள்ள மார்க்கெட்டில் இம்மாத்திரைகள் பகிரங்கமாக விற்கப்படுகின்றன. இதுபோன்ற மாத்திரைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டு மருந்து கடைகளில் சர்வ சாதாரணமாக விற்கப்படுகிறது.இந்நிலையில் இந்த போலி மாத்திரைகளால் பின்விளைவுகள் அதிகம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனினும் போலி வயாக்ரா மாத்திரை விற்பனை அமோகமாக நடக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் பலர் இந்த மாத்திரைகளை வாங்கி செல்கின்றனர்.
President Obama Is Face Of Pakistan Viagra
**************************************************************
President Obama is having a “hard time” in Pakistan’s black market.For some strange reason, Obama is now the unofficial spokesman of illegal Pakistani Viagra. The President’s face is stamped across boxes of the blue pill, a drug that is technically outlawed across the country.


