32°C
விளம்பரம்
Advertisement

Amazon Prime -ல் இந்தி மொழியில் சூரியாவின் ‘சூரரைப் போற்று ரிலீஸ்i!

admin சேலம் Published: April 1, 2021 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



நடிகர் சூர்யாவின் “சூரரை போற்று” . சூர்யா நடித்து OTT தளத்தில் மிகபிரமாண்ட வெற்றி பெற்ற படம், 2D entrainment “சூரரை போற்று”. இத்திரைப்படம் முதல் முறையாக Amazon Prime நிறுவனம் மூலம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.

சூர்யா நடிப்பில், மிக பிரமாண்ட தயாரிப்பாக கடந்தாண்டு Amazon Prime ல் வெளியான திரைப்படம் “சூரரை போற்று”. நட்சத்திர அந்தஸ்து கொண்ட, பிரபல முன்னணி நடிகர் நடிப்பில் டிஜிட்டலில் நேரடியாக வெளியான முதல் படமாக இப்படம் சாதனை படைத்தது.

இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில், சூர்யா மாறுமட்ட வேடத்தில் நடிக்க, இந்திய விமானதுறையில் சாதனை படைத்த கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவான படம் தான் “சூரரை போற்று”.

கதை சொல்லல், காட்சியமைப்பு, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என அனைத்து துறைகளிலும் பிரமாதப்படுத்தியிருந்தது. எதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார் சூர்யா. விமர்சகர்களிடமும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. டிஜிட்டலில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தென்னிந்திய திரைப்படமாக சாதனை படைத்தது.

Amazon Prime ல் வெளியான இப்படம் உலக அளவில் பார்வையாளர்களை ஈர்த்து, பல திரை விழாக்களிலும் பங்கு கொண்டது. உலக அளவில் மதிக்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இப்படம் இடம்பிடித்து சாதனை படைத்தது. தென்னிந்தியாவிலும் உலக அளவிலும் கிடைத்த வரவேற்பினை அடுத்து, Amazon Prime நிறுவனம் இப்படத்தினை இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து, வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தனது தளத்தில் வெளியிடுகிறது.

Amazon Prime தளத்தில் முதல் முறையாக ஒரு தமிழ் படம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்