விசா மோசடி புகழ் தேவயானி முழு சட்டபாதுகாப்புடன் இந்தியா புறப்பட்டார்!
அமெரிக்க விசா மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய துணைத் தூதர் தேவயானி இன்று இந்தியா திரும்புகிறார்.இந்திய அரசு தேவயானியை ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதரகத்தின் ஆலோசகராக நியமிக்க சிபாரிசு செய்தது. இது, வியன்னா பிரகடனத்தின்படி, கைது செய்யப்படுவதில் இருந்து விதிவிலக்கு கிடைக்கக்கூடிய ‘சட்ட பாதுகாப்பு’ கொண்ட பதவி ஆகும். தற்போது தேவயானியின் புதிய பதவிக்கான அந்தஸ்தை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அவரது அந்தஸ்துக்கான புதிய விசாவை அமெரிக்கா வழங்கியுள்ளது. அவரது விசா சட்டப்பாதுகாப்புள்ள விசாவாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய துணை தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ரகடே விசா மோசடி மற்றும் பெண் ஊழியரின் சம்பள மோசடி புகார்களுக்காக அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க தூதர்களின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே தேவயானி மீதான வழக்கு விசாரணை வருகிற 13–ந்தேதி நியூயார்க் கோர்ட்டில் நடைபெறுவதாக இருந்தது. இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று நியூயார்க் கோர்ட்டில் தேவயானி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.இதற்கிடையே, இந்த வழக்கில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தேவயானிக்கு இந்த வழக்கில் இருந்து அமெரிக்கா முழு தூதரக விதிவிலக்கு அளித்து சட்ட பாதுகாப்பு வழங்கியுள்ளது.
இது தொடர்பான கடிதத்தை அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பிரீத் பாராரா மாவட்ட நீதிபதி ஷிரா ஷெயின்ட் லினுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதை தொடர்ந்து பெண் ஊழியர் சங்கீதா ரிச்சர்ட்டுக்கு விசா வாங்க மோசடி செய்தல் மற்றும் அதற்காக பொய் தகவல்கள் கொடுத்தல் என்ற 2 குற்றச்சாட்டுகள் தேவயானி மீது பதிவு செய்யப்பட்டன. மேலும் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்ல அனுமதியும் வழங்கப்பட்டது.
இதையடுத்து நாடு திரும்பும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: “என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டு இது. நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிச்சயம் நிரூபிப்பேன்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில்: “மிகவும் மோசமான சூழலில் நான் சிக்கிக் கொண்ட போது எனக்கு உதவிய அமைச்சர்கள், வெளியுறவு அமைச்சக நண்பர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் என் தேச மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். இந்திய அரசாங்கமும், நானும் எடுத்துள்ள நிலைபாடு சரியானது என நிரூபிக்கப்படும்” என தெரிவித்தார்.
Devyani Khobragade gets full diplomatic immunity, on her way to India
*************************************************************
Diplomat Devyani Khobragade left for India on Friday after a deal between the India and US in which she was granted diplomatic immunity from charges of alleged visa fraud and lying about underpaying her domestic help. Her arrest and alleged humiliation nearly a month ago had strained ties between the two countries.


