பட்டதாரிகளுக்கு பிரகதி கிருஷ்ணா கிராம வங்கியில் பணி!
கர்நாடகா மாநிலம் காந்தி நகர் பெல்லாரியில் செயல்பட்டு வரும் பிரகதி கிருஷ்ணா கிராம் வங்கியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 428
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Officer Scale-II (General Banking Officer) – 10
02. Officer Scale-I – 149
03. Office Assistant (Multipurpose) – 269
வயதுவரம்பு:
01. Officer Scale-II பணிக்கு 21 முதல் 32 -க்குள் இருக்க வேண்டும்.
02. Officer Scale -I & Office Assistant பணிக்கு 18 முதல் 28 -க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Officer Scale-II பணிக்கு 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Officer Scale-I & Office Asst பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழி, கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 2013 செப்டம்பர்/அக்டோபரில் IBPS நடத்திய பிராந்திய கிராம வங்கிகளுக்கான தகுதித்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
01. Officer Scale-II பணிக்கு மாதம் ரூ.39,314
02. Officer Scale-I பணிக்கு மாதம் ரூ.29,384
03. Office Assistant பணிக்கு மாதம் ரூ.16,252
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வங்கியின் www.pragathikrishnabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.01.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.pragathikrishnabank.com/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


