32°C
விளம்பரம்
Advertisement

இரட்டை இலை எனக்குதான்! – விடாமல் அப்பீல் செய்தார் சசிகலா!

admin சேலம் Published: April 24, 2019 2 நிமிட வாசிப்பு Updated: April 25, 2019 இந்தியா
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




டிடிவி தினகரன் தன் அமமுக-வை தேர்தல் கமிஷனில் பதிவுசெய்து விட்ட நிலையில்  ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கி ணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ். இ.பி.எஸ். தரப்புக்கு ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது

டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னம் மற்றும் அ.இ.அ.தி.மு.க. கட்சி பெயரை அனுமதித்து தேர்தல் கமிஷன் 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு முடிவடையும் வரை இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்தாமல் முடக்கிவைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் சசிகலா, டி.டி.வி.தினகரன் அணியினருக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அப்படி சின்னம் ஒதுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் தொடர்ந்த வழக்கின் போது இரட்டை இலை கோரிக்கை தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தரப்புக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தரப்புக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா தரப்பு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்