32°C
விளம்பரம்
Advertisement

முன்கூட்டியே கலைக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறை – தேர்தல் ஆணையம்..

admin சேலம் Published: September 27, 2018 2 நிமிட வாசிப்பு Updated: September 28, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நம் நாட்டில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றதிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.ஆனால் அதற்கு முன்னதாகவே தெலுங்கானா மாநில அரசு சட்டப் பேரவையை கலைத்து விட்டு காபந்து முதல்வராக சந்திரசேகர ராவ் செயல்பட்டு வருகிறார். இத்தனைக்கும் தெலுங்கானா சட்டப்பேரவையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு வரை நீடிக்கிறது. இருந்த போதிலும் இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான் மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் அதோடு சேர்த்து தேர்தலை சந்தித்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளது. இப்படி செய்யும் போது அடுத்த தேர்தல் வரும் வரையில் சில திட்டங்களை அறிவித்து தேர்தலுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தீவிரமாக விசாரித்து வந்த தேர்தல் ஆணையம் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் படி ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து, தேர்தல் நடந்து முடிந்து, புதிய ஆட்சி அமைக்கும் வரை தொடரும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.முன்கூட்டியே தேர்தல் நடத்தும் வகையில் சட்டப்பேரவையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடியும் முன் கலைத்தால்கூட, கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்று விளக்கம் அளித்துள்ளது.

ஆக,தெலங்கானா மாநிலத்திலும் தேர்தல்ஆணையத்தின் இந்த விளக்கத்தைத்தொடர்ந்து அங்குத் தேர்தல் நடத்தை விதி முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

மத்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 1994-ம் ஆண்டு மத்திய அரசுக்கு எதிராக எஸ்.ஆர் பொம்மை உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சில அறிவிப்புகளைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்து உள்ளது.

இதன்படி, தேர்தல் நடத்தைவிதமுறைகள் நடைமுறைக்கு வந்தபின், காபந்து அரசும், முதல்வரும் அன்றாட அரசுப்பணிகள் நடக்க உதவத்தான் முடியுமே தவிர எந்தவிதமான கொள்கை முடிவு களும், திட்டங்களும், புதிய நடவடிக்கைகளும் எடுக்க முடியாது.

தேர்தல் நடத்தைவிதிமுறை விதிகள் பிரிவு-4ன்படி, ஆட்சியில் இருக்கும் கட்சி அதாவது, காபந்து அரசு அது மாநிலம் அல்லது மத்திய அரசாக இருந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும்.

அது மட்டுமல்லாமல், அரசு வாகனங்கள், கருவிகள், அரசின் பணம், வளங்கள், அதிகாரிகள், அரசு ரீதியான பயணம் உள்ளிட்டவற்றை அரசு சாராத பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக அரசு முறைப் பயணம் என்று கூறிக்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்கக் கூடாது. இந்த விதிமுறை மாநிலத்தில் காபந்து முதல்வராக இருப்பவருக்கும் பொருந்தும், மத்தியில் காபந்து பிரதமராக இருப்பவருக்கும் பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்