32°C
விளம்பரம்
Advertisement

திமுக முதன்மை செயலாளர் ; டி.ஆர்.பாலு சுய விபர குறிப்புகள் கொஞ்சம் இதோ:

admin சேலம் Published: September 14, 2018 2 நிமிட வாசிப்பு Updated: September 15, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக பொருளாளராக 2008ஆம் ஆண்டு ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், பொருளாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கட்சியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த பொறுப்பிற்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டார். உடல்நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக தலைவர் கலைஞர் காலமானதையடுத்து, தலைவர் பதவி காலியானது. ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து காலியாக இருந்த திமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டார்.

டி.ஆர்.பாலு சுய விபர குறிப்புகள் கொஞ்சம் இதோ:

தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு என்பதுதான் டி.ஆர்.பாலுவின் ஒரிஜினல் பெயர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். 1980-களில் சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்து பணியாற்றியவர்! அப்போது டி.ஆர்.பாலுக்கென்று ஒரு தனி செல்வாக்கு கட்சியில் உருவானது. திமுகவை சென்னையில் ஒரு பலம் பொருந்திய அமைப்பாக மாற்றியதில் முக்கிய பங்கு டி.ஆர்.பாலுவுக்கும் போய்ச் சேரும்.

அதனால்தான் 1996 முதல் 4 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 4 முறையும் தென் சென்னை மக்களவை தொகுதியிலிருந்துதான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னையின் மாவட்ட செயலாளர் பொறுப்பை அடுத்து, தனது சொந்த மாவட்டத்திலும் அரசியல்ரீதியான கவனம் செலுத்தி அங்கும் திமுகவின் செல்வாக்கை நிலைநிறுத்தினார்.

இதன்பின்னர், திமுக சார்பில் மன்மோகன்சிங் அமைச்சரவையில் தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். இதில் முக்கியமாக சொல்ல வேண்டுமானால், நாடு முழுவதும் சாலைகளை அமைப்பதில் பெரும் கவனம் செலுத்தினார். ஏராளமான நான்கு வழிச் சாலைகள் இன்று நாடு, நகரம் முழுவதும் உருவாகி இருப்பதற்கு டி.ஆர்.பாலு பங்கு அதிகம். மேலும் அந்த துறை அமைச்சராக இருந்தபோதே, சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வர பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட தூண்டுகோலாக இருந்தார்.

தமிழகத்திற்கும் டெல்லிக்கும் இடையே பாலமாக இருந்து திமுக வளர்ச்சிக்கு உதவியவர். மறைந்த முரசொலி மாறனுக்கு பிறகு டெல்லியில் அதிக செல்வாக்கோடும், கட்சி ரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும் செயல்பட்டவர் என்ற பெயரை பெற்றவர் டி.ஆர்.பாலுதான்!

மறைந்த கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக கடைசிவரை செயல்பட்டவர் டி.ஆர்.பாலு. இன்னும் சொல்லப்போனால் கருணாநிதியின் அரசியல் நிழல் என்றுகூட சொல்லலாம். அதனால் தான் 2001-ல் ஜெயலலிதா அரசு கருணாநிதியை கைது செய்தபோது, ஆத்திரமும், கோபமும் அடைந்த டி.ஆர்.பாலு, சிபிசிஐடி ஆபீசில் தன் காரை கொண்டு ஆவேசமாக மோதி உள்ளே நுழைய பார்த்தார். அந்த அளவுக்கு கருணாநிதி மீது வெறித்தனமான பாசத்தை வைத்தவர். ஒரு கடின உழைப்பாளி. தொண்டர்களோடு தொண்டர்களாக இருப்பதுதான் டி.ஆர்.பாலுவின் பிளஸ் பாயிண்ட்டே.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்