32°C
விளம்பரம்
Advertisement

தலித் என்ற வார்த்தையை ஊடகத்துறை பயன்படுத்தத் தடை!

admin சேலம் Published: September 4, 2018 4 நிமிட வாசிப்பு Updated: September 5, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




இப்போதும் அநேக இடங்களில் தலித் ( Dalit ) என்னும் சொல் புழக்கத்தில் உள்ளது. ஆனாலும் இந்திய அரசியல் சாசனப்படி தலித் என்ற சொல்லுக்கு அங்கீகாரம் கிடையாது.  தலித் என்ற மராட்டிய சொல்லுக்கு ஒடுக்கப் பட்டவர்கள் என்று பொருளாம். இந்நிலையில்  தலித் என்ற வார்த்தையை ஊடகத்துறை பயன்படுத்தக் கூடாது என்றும்  Scheduled Caste என்பதற்கு நிகரான பிராந்திய மொழி வார்த்தைகளை பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தியது.

பண்டைய இந்தியாவில் மக்கள் தனித் தனி இனக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் தனிப் பட்ட பழக்க வழக்கங்கள், கடவுள் கோட்பாடுகள். இந்து மதம் என்ற ஒரு பொதுப் பெயரால் அப்போது இவைகள குறிக்கப்பட வில்லை. பின்னாளில் வந்த ஆட்சி மாறுதல்களினால் அனைத்து குழுக்களுக்கும், இந்து அல்லது இந்துமதம் என்ற ஒரு பொதுப் பெயர் உருவானது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1931 – இல் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 1935 – இல் அவர்களால் கொண்டு வரப்பட்ட சட்டம் 1937 – இல் நடைமுறை படுத்தப் பட்டது. அதில் ஷெட்யூல்ட் ஜாதி  (Scheduled Caste) என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டது. ( Ref :  The Government of  India (Scheduled Castes ) Order 1936 )

பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தாழ்த்தப்பட்டட மற்றும் பழங்குடி மக்களுக்குபட்டியல் இன மக்கள் ( Scheduled Caste and Tribes )  என்ற அடையாளம் தந்தனர். இதனை நீட்டி முழக்கி எழுதும் போது நீண்ட பெயராகத் தோன்றியது. எனவே பின்னாளில், காந்தியார் “கடவுளின் பிள்ளைகள்”  என்ற அர்த்தத்தில் குறிப்பிட்ட ஹரிஜன்” ( Harijan ) என்ற சொல் எளிமையாகவும், இந்தியா முழுமைக்கும்  அடையாளம் காணக் கூடியதாகவும் இருந்தபடியினால் அந்த சொல் ரொம்ப காலம் பயன் பட்டது.

தமிழ் நாட்டில், திராவிட இயக்கங்களின் செல்வாக்கினால் தாழ்த்தப்பட்ட மக்களை ஆதி திராவிடர் ( Adi Dravidar ) என்ற சொல்லால் குறித்தனர். ஆனால் நடைமுறையில் பறையர் சமூகத்தினரைத் தவிர மற்ற பள்ளர், அருந்ததியர் சமூகத்தினர் இதனை அதிகம் பயன்படுத்தவில்லை. இதனால் தமிழ் நாட்டில் ஆதிதிராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிப்பது போலா யிற்று.  எனவே மற்றவர்கள், ஆதிதிராவிடர் என்ற பெயரையே பொதுப் பெயராக வைக்க வேண் டாம் என்று சொல்வதோடு, தமிழ் நாட்டில் ஆதி திராவிடர் நலத் துறை என்ற பெயரையே மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். இது போலவே தலித் என்ற சொல் சிறுபான்மைப் பிரிவின ரான முஸ்லிம் சமுதாய மக்களையும் எஸ்.சி / எஸ்.டி மக்களையும் உள்ளடக்கிய சொல்லாக சுட்டிக் காட்டப் பட்டது. முஸ்லிம் சமுதாய மக்கள் அதனை விரும்பாததோடு தங்களை முஸ்லிம் என்று அழைக்கப் படுவதையே விரும்பினர். ஹரிஜன் என்ற சொல்லுக்கு சரியான மாற்றுச் சொல்லாக தலித் என்னும் சொல் விளங்கியதால் பட்டியல் இனமக்கள் ஏற்றுக் கொண்டனர். மேடைகளிலும் எழுத்துக்களிலும் இந்த சொல் பிரபலமாகி விட்டது. இப்போது யாரும் தலித் என்ற சொல்லை அதன் மராட்டிய மொழியின் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற பொருளில் பார்ப்பதில்லை. SC/ST  என்ற பட்டியலின மக்களுக்கான ஒரு பொதுச் சொல்லாகவே பார்க்கின்றனர்.

இதனிடையேதான் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம். தலித் என்ற வார்த்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லாததால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பதங்களை பயன்படுத்த வலியுறுத்தியுள்ளது.இது குறித்து மத்திய அமைச்சகம் கூறும் போது “தலித் என்ற வார்த்தை அடையாளக் குறியீடாகவும், அரசியல் சார்ந்த பதமாகவும் இருக்கிறது” என்று கூறியுள்ளது.

தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ஒவ்வொரு முறையும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தலித்தென்று அடையாளப்படுத்த வேண்டா மென்றும், ஆங்கிலத்தில் நடைமுறையில் இருக்கும் Scheduled Caste என்பதற்கு நிகரான பிராந்திய மொழி வார்த்தைகளை பயன்படுத்திக் கொள்ளவும்” என்று ஊடகத்துறைக்கு  அறிவுறுத்தப் பட்டிருந்தது  தலித்திற்கு பதிலாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பதத்தினை பயன்படுத்தக் கூறி அறிவுறுத்தியது.

முன்னதாக தலித்தென்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று ஊடகங்களுக்கு அறிவுறுத்து வது குறித்து ஆறு வாரத்திற்குள் பரிசீலிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டிருந்தது.

மத்திய அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பினைப் பற்றி சமூக நீதி அமைச்சகத் தின் துணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறிய போது “தலித்தென்ற வார்த்தை பெருமை சேர்ப்பதாகவே அமைகிறது” என்று கூறினார். மேலும் இந்த பெட்டிசன் புத்த மதம் தழுவிய ஒருவரால் வைக்கப்பட்டது. அரசு தன்னுடைய ஆவணங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்றே வைத்துக் கொள்ளட்டும். ஆனால் ஊடகத்துறை பயன்படுத்துவதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று தான் நினைக்கிறேன்.நிறைய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களை தலித்தென அடையாளப்படுத்திக் கொள்வதில் எந்த வருத்தமும் அடைவதில்லை. அம்பேத்காரினை பின்பற்றும் மக்கள் இந்த வார்த்தையை பெருமையாகவே பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்த சுகாதே தோரட் இது பற்றி கூறுகையில் “இந்த வார்த்தை பிரயோகத்தில் எந்த தவறும் இல்லை என்று தான் கூறுவேன்” என்று கூறியுள்ளார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்