32°C
விளம்பரம்
Advertisement

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

admin சேலம் Published: September 1, 2018 3 நிமிட வாசிப்பு Updated: September 2, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




வருடா வருடம் நடப்பது போல் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதையொட்டி, இன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று தலைமைத் தேர்தல் அதிகாரி யின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, இந்த ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க திருத்தப் பட்டியல் அரசு சார்பில் வெளியிடப்பட்டது . அதில், “ இந்த ஆண்டு வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத் தில் மொத்தம் 5,82,89,379 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2,88,76,791 பேர் ஆண்கள் மற்றும் 2,94,07,404 பேர் பெண்கள், 5,184 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். காஞ்சிபுரம் சோழிங்க நல்லூர் தொகுதிதான் 6 லட்சம் வாக்காளர்களுடன், மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. அதேபோல, சென்னை துறைமுகம் தொகுதி 1.64 லட்சம் வாக்கா ளர்களுடன் சிறிய தொகுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதைத் தொடர்ந்து, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்த மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல், இன்றுமுதல் வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை, நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பெயர் மற்றும் இதர விவரங்கள் திருத்தம் இருந்தால், வாக்குச் சாவடிக்குச் சென்று சரிசெய்துகொள்ளலாம். வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், வரும் 9-ம் தேதி, 23-ம் தேதி மற்றும் அக்டோபர் 7 மற்றும் 14-ம் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி துணை ஆணையர் லலிதா வெளியிட்டார். இதில் ஆண் வாக்காளர்கள் 18 லட்சத்து 71 ஆயிரத்து 638 பேரும், பெண் வாக்காளர்கள் 19 லட்சத்து 19 ஆயிரத்து 582 பேரும், இதர வாக்காளர் களாக 906 பேரும் என மொத்தம் 37 லட்சத்து 92 ஆயிரத்து 126 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 38 லட்சத்து ஓராயிரத்து 919 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்த நிலையில், தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில், 9 ஆயிரத்து 793 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, அதிகபட்சமாக பெரம்பூர் சட்ட மன்றத் தொகுதியில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 58 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 939 வாக்காளர்களும் உள்ளனர்.

அத்துடன் வேலைக்குச் செல்வோரின் நலன் கருதி, செப்டம்பர் மாதத்தில் 9 மற்றும் 23ஆம் தேதி களிலும் அக்டோபர் மாதத்தில் 7 மற்றும் 14ஆம் தேதிகளிலும் வாக்குச் சாவடிகளிலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்