32°C
விளம்பரம்
Advertisement

டூ வீலரில் பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.!.ஐகோர்ட் கெடுபிடி

admin சேலம் Published: August 24, 2018 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுப்பதற்காக இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல் மெட் அணிய வேண்டும் என்று 1985-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பின், 1988-ல் வெளியான மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129-லும் ஹெல்மெட் கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதை அமல்படுத்து வதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டவில்லை. அவ்வப்போது நீதிமன்றங்கள் இதில் தலையிட்டு, ஹெல்மெட் கட்டாயம் என உத்தரவுகளை பிறப் பிக்கும். ஆனாலும், ஒன்றிரண்டு மாதங்கள் மட்டும் வாகன ஓட்டி களை போலீஸார் எச்சரிப்பதும், அபராதம் வசூலிப்பதும் நடக்கும்.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இருசக்கர வாகனத்தில் சென்றவர் ஹெல்மெட் அணியாத தால்தான் தலையில் காயமடைந்து இறந்தார் என்று காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது. இதை யடுத்து, நீதிபதி என்.கிருபாகரன், ‘தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்’ என்று உத்தரவிட்டார். ஹெல்மெட் அணியாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டப்படி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்யலாம். இந்தத் தகவலை ஜூன் 18-ம் தேதிக்குள் ஊடகங்கள் வாயிலாக வாகன ஓட்டிகளுக்கு உள்துறை செயலரும், காவல்துறை தலைவரும் தெரிவிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை நிறை வேற்றியது குறித்த அறிக்கையை ஜூன் 19-ம் தேதி அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் நீதிபதி தெரிவித்திருந்தார். இதையடுத்து ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணிவதை கட்டாய மாக்கி தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

இப்படி மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல் மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை என்றும் அதை அமல்படுத்தக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிர மணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் உட்கார்ந்து வருபவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்தால் மட்டும் போதாது என நீதிபதி கள் கண்டனம் தெரிவித்தனர்.

2015ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் படி, ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பத ற்கு வாகன ஓட்டிகளிடம் அபராதம் மட்டும் விதிப்பது மட்டுமே விழிப்புணர்வு அல்ல என்று கூறிய நீதிபதிகள், வாகன ஓட்டிகளுக்கு வேறு எந்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்ததுள்ளது என சரமாரியாக தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பினர்.

“இருசக்கர வாகனத்தில் செல்பவர்களில் வாகன ஓட்டிகளே பலர் ஹெல்மெட் அணியாமல் செல் வதை, நாங்களே பலமுறை சாலைகளில் செல்லும் போது பார்த்திருக்கிறோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் அதிவேகத்தில் காரில் சென்ற கேரளா முன்னாள் கவர்னர் மற்றும் தற் போதைய நீதிபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை போன்று தமிழகத்திலும் சட்ட விதிகள் உள்ளன அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது.

இதையடுத்து, இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ள மோட்டார் வாகன சட்ட விதிகள் அமல்படுத்தப்படும் எனக்கூறிய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், இதுசம்பந்தமாக பத்திரிக்கை, தொலைக் காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் பயணித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தனி அறிக்கை தாக்கல் செய்வதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்