32°C
விளம்பரம்
Advertisement

சூரியனை ஆய்வு செய்யக்கூடிய ‘செயற்கைகோள்!- நாசா ஏவியது!

admin சேலம் Published: August 12, 2018 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஆறு வருஷ நான் ஸ்டாப் ட்ராவல்; மணிக்கு 1லட்சத்து 7 ஆயிரம் கி.மீ வேகம் என்ற கணக்கில் உலகத்தின் முதல் சூரியனை நோக்கி பயணிக்கும் டெல்டா 4 ராக்கெட் இன்று மாலை வானில் சீறி பாய்ந்தது.

கொதிக்கும் வெப்ப கிரகமான சூரியன் குறித்த ஒரிஜினல் தகவல்களை அறிவதற்கு கடந்த 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஹீலியோஸ்-1, ஹீலியோஸ்-2 செயற்கைக்கோள்களை ஜெர்மனி யும், அமெரிக்காவும் இணைந்து விண்ணில் செலுத்தியது. ஆனால், பூமியிலிருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற செயற்கைக்கோள் சூரியனிடமிருந்து சுமார் 27 மில்லி யன் மைல் தூரத்தில் இருந்து தான் ஆய்வு செய்ய முடிந்தது. இதனால் போதிய தகவல்களை திரட்டமுடிய வில்லை. 1985 ஆம் ஆண்டு வரை தகவலை அனுப்பியது. அதன் பிறகு அது செயலிழந்து போனது.

இதையடுத்துதான், பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் தாங்கக்கூடிய, சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) எனும் செயற்கைகோளை 20 லட்சம் டாலர்கள் செலவில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உருவாக்கியுள்ளது.

இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி அமெரிக்க நேரப்படி நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் செலுத்த நாசா நேரம் குறித்து இருந்தது. ராக்கெட் புறப்பட ஒரு நிமிடம், 55 வினாடிகள் இருந்த போது, தொழில்நுட்ப பழுது கண்டுபிடிக்கப்பட்டதால் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான நேரத்தை 24 மணி நேரத்திற்கு ஒத்திவைத்தது.

இதையடுத்து , இன்று (ஆகஸ்ட்-12) 12.15 மணியளவில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் எடை 612 கிலோ. நீளம் 9 அடி, 10 இன்ச். 1,400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும். இதற்காக கார்பனால் ஆன வெளித்தகடு பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 6.9 லட்சம் கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த விண்கலம் சூரியனின் மேற்பரப்பு அருகே, 59.5 லட்சம் கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்படும்.

இதுவரை எந்தவொரு விண்கலமும், இதனை எட்டியதில்லை.சூரியன் – பூமி இடையிலான துாரம் 14.9 கோடி கி.மீ. நமது பூமியின் பரப்பை வளிமண்டலம் சூழ்ந்திருப்பதை போல, சூரியனின் பரப்பை, ‘கொரோனா’ எனும் பிளாஸ்மா மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த கொரோனாவுக்குள்ளேயே சென்று, இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதுதான் ஹைலைட்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்