32°C
விளம்பரம்
Advertisement

தமிழகத்தில் பருவமழை: இந்த ஆண்டு 28 சதவீதம் குறைவு

admin சேலம் Published: December 6, 2013 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




கடந்த ஆண்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாகவே பெய்த நிலையில், இந்தாண்டு இதுவரை 28 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. பருவமழை முடிய இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ளதால் அதிக மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
dec 7 = monsoon_
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. பருவமழை தொடங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை.
மேலும் வங்கக் கடலில் உருவான புயல்களும் ஆந்திர மாநிலம் நோக்கி நகர்ந்ததால், தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை குறைந்தது.

கடந்த ஆண்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாகவே பெய்த நிலையில், இந்தாண்டு இதுவரை 28 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. பருவமழை முடிய இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ளதால் அதிக மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் தமிழக நிலபரப்பில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் தமிழகத்தில் குறைவாக மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பருவமழை இன்னும் 3 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் என்பதால் ஓரளவு மழை பெய்யும். இந்த மழையும் கடலோரப் பகுதிகளில் மட்டுமே பெய்யும். உள்மாவட்டங்களில் குறைவான மழையே பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்