தமிழ் குரல் / AI Voice
பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா, திமுக முதன்மைச்செயலாளர் துரைமுருகன் ஆகியோரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இபிஎஸ் ஆர்மி என்ற பெயரில் ட்விட்டர் பக்கம் உருவாகியது. இப்பக்கத்தில், நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது அவையில் தமிழக முதல்வரை அடைமொழியுடன் அமைச்சர்கள் புகழ்ந்து பேசியதை அ.தி.மு.க.வினர் பதிவிட்டுள்ளனர். அந்த பக்கத்தை கண்டால் அது உங்களுக்கும் புரியும்.
தமிழக முதல்வரின் ஆர்மி பக்கத்தில் இடம் பிடித்தவைகளில் பெரும்பாலும் டெமேஜ் செய்பவை என்றாலும் அவரை புகழந்து இடம் பிடித்த சில வாழ்த்து அட்டைகள் இதோ:
”மாதம் மும்மாரி பொழிய, நீர் நிலை உயர நெல் உயரும். விவசாயி நலன் வளம் செழிக்க இனிதே அரசன் ஆள்வான்….
இப்பதிவின் கீழ் இணைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் கோடையில் 80 அடியை தொட்ட மேட்டூர் அணை என்று எழுதி ”ராசியான் முதல்வர்” என புகழ்ந்துள்ளனர்.

மணச்சநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி பெயரில் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் போஸ்டரில் எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தின் பெயருடன் “கொங்கு நாடு கண்டெடுத்த தங்கம்” என முதல்வரை புகழ்ந்துள்ளனர்.

இதே பாணியில் குன்னுர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராமு பெயரில் வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ”சேலம் தந்த கொள்கை தங்கம்” என முதல்வருக்கு அடைமொழி வழங்கப்பட்டுள்ளது.

சங்ககிரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பெயரில் வெளியான போஸ்டர் ஒன்றில் தமிழக முதல்வரை சுற்றுச்சூழல் காத்த சூறாவளி என புகழ்ந்துள்ளனர்.

சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் பெயரில் வெளியாகியிருக்கும் போஸ்டரில் “சோதனைகளை சாதனைகளாக மாற்றும் செம்மல்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு பெயரில் வெளியாகியிருக்கும் போஸ்டரில் “இந்தியாவின் இரண்டாம் இரும்பு மனிதர் “ என தமிழக முதல்வருக்கு அடைமொழி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெயரில் உள்ள போஸ்டரில் “எளிமையின் இலக்கணம் “ என தமிழக முதல்வரை புகழ்ந்துள்ளனர்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் பெயரில் வெளியாகியிருக்கும் போஸ்டரில் “நாடு போற்றும் நல்ல பண்பாளர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பெயரில் வெளியாகி உள்ள போஸ்டரில் “கள்ளமில்லா சிரிப்புக்கு சொந்தக்காரர்” என தமிழக முதல்வரைக் குறிப்பிட்டுள்ளனர்.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் பெயரில் வெளியாகியுள்ள போஸ்டரில், “சரித்திர பதிவேட்டில் சாமானிய முதல்வர் “என குறிப்பிடப்பட்டுள்ளது.


