பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா – சென்னை போலீஸ் கண்டிப்பு!

பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா – சென்னை போலீஸ் கண்டிப்பு!

சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 7ஆம் தேதிக்குள் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் பெயர்ப் பட்டியல், பள்ளி வாகன ஓட்டுனர்களின் விவரம் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு பற்றிய சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
dec 4 - police
சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்த வெளிமாநில இளைஞர்கள் 5 பேர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் பற்றிய விவரங்களை அதன் உரிமையாளர்கள் அருகிலுள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று காவல் துறை ஆணையிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தடை நீக்கப்பட்டு விட்ட நிலையில் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் தங்களது வீட்டில் குடியிருப்பவர்களின் பெயர், நிரந்தர முகவரி, ஏற்கனவே குடியிருந்த வீட்டு முகவரி, புகைப்படம், செல்பேசி எண் ஆகியவற்றை 60 நாட்களுக்குள் தர வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் வங்கி மற்றும் ஏ.டி.எம்., மையங்களில், இந்த மாத இறுதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், காவலாளிகளை நியமிக்க வேண்டும் என, சென்னை போலீஸ் கெடு விதித்துள்ளதுடன் சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல், பள்ளி வாகன ஓட்டுனர்களின் விவரம் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நம்மிடம் பேசிய ஒரு சீனிய சிட்டிசன்,”சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தன அதிகாரத்தை எல்லை மீறி பயன்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது” என்றார்

கார்ட்டுன்:timesofindia.com

Related Posts