பெண்கள் விஷயத்தில் அதிகமா தப்பு பண்றது பாஜக எம்பி, எம்எல்ஏ-க்கள்!
மோடி தலைமையிலான பாரதிய கட்சி கடந்த 4 ஆண்டு ஆட்சியின் இறுதியில் வாக்காளர்களின் மதிப்பினை இழந்துவிட்டதாக அக்கட்சியின் சீனியர் லீடர் யஷ்வந்த் சின்ஹா தெரிவிச்சு இருந்தார். தன் சக எம்.பி.களுக்கு அவர் எழுதியிருந்த ஒரு கடிதாசியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள சின்ஹா, பாலியல் வன்முறை சம்பவங்கள் தினசரி நிகழ்வாகி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பாலான பாலியல் வன்முறை சம்பவங்களில் பாரதிய ஜனதா கட்சியினரே ஈடுபட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டி இருந்த நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிக்கிய எம்.பி.க்கள் மற்றும் எல்எல்ஏக்களின் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில் பாஜகவை சேர்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் 12 பேர் மீது வழக்கு பதியப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரொம்ப காலமாகவே பல அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது பெண் களுக்கு எதிரான குற்ற வழக்குகள் ஏற்கனவே பதிவாகி இருப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதே சமயம் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான புள்ளி விவரங்களை தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆராய்ந்து இன்று அறிக்கையொன்றை வெளியிட்டது.
இதில், தற்போதுள்ள 4,845 எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள், அவர்களது வேட்பு மனுத் தாக்கலின் போது அளித்த பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 33 சதவீதமாக 1,580 பேர் மீது கிரிமினல் குற்றங்கள் பதிவாகி உள்ளன. இதில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 48 பேர் மீது பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த 48 பேரில் 3 பேர் மட்டுமே எம்.பி.க்கள், மற்ற வர்கள் எம்எல்ஏக்கள் ஆவர். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இவர்களில் மிக அதிகமாக பாஜகவை சேர்ந்த 12 பேர் மீது பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.
2வது இடத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கட்சியை சேர்ந்த 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிந்த எம்.பி., எம்எல்ஏக்களில் 3வது இடத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் உள்ளது. இக்கட்சியை சேர்ந்த 6 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
தெலுங்கு தேசக் கட்சியினர் 5, காங்கிரஸ் கட்சியினர் 5, பிஜு ஜனதா தளத்தினர் 4 எம்.பி., எம்எல்ஏக்கள் மீதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளன.
இப்பிரச்சினையில் 3 சுயேச்சைகளும் சிக்கியுள்ளனர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் திமுகவில் தலா இருவர் வீதமும் சிக்கியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த ஒருவரும் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
மேலும்இந்தப் பட்டியலில் 47 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள் இருப்பது தெரிந்தும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததிலும் பாஜக முதலிடத்தில் உள்ளது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் 35 வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான பல குற்றங்களில் அதாவது கடத்துதல், வலுக்கட்டாயமாக திருமணம்ல், பாலியல் பலாத்காரம், சிறார்களை பாலியல் தொழில் இன்னும் பல குற்றங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இது போன்று குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசியல் கட்சியில் இடம் கொடுக்ககூடாது என்று ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் அதை பொருட்படுத்தாமல் குற்றவாளிகள் என்று தெரிந்தும் தேர்தலில் போட்டியிட குறிப்பாக பாஜகவே அதிகம் அனுமதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



