சென்னை ஐகோர்ட்டில் ஜாப் ரெடி!
காலியிட விபரம்: நீதிபதிகளின் தனி உதவியாளர் பிரிவில் 71ம், பதிவாளர்களுக்கான உதவியாளர் பிரிவில் 10ம், துணை பதிவாளர்களுக்கான தனி உதவியாளர் பிரிவில் 1ம் சேர்த்து மொத்தம் 82 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: நீதிபதிகளுக் கான தனி உதவியாளர் பிரிவுக்கு, பட்டப்படிப்புடன், முதுநிலை ஆங்கில தட்டச்சு மற்றும் சுறுக்கெழுத்து பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதனுடன் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷனிலும் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* பதிவாளருக்கான தனி உதவியாளர் பதவிக்கு, ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தட்டச்சு மற்றும் சுறுக்கெழுத்து பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதனுடன் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷனிலும் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* இதே தகுதியே, துணைப் பதிவாளருக்கான தனி உதவியாளர் பிரிவுக்கும் தேவைப்படும்.
தேர்ச்சி முறை: ‘ஸ்கில் டெஸ்ட்’ மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரி யிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, recruitment.mhc@gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். இதனை ‘டிடி’யாக செலுத்த வேண்டும்.
கடைசி நாள் : 2018 மே 4.
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு



