ஈரான் அரசாங்கத்திற்கு அமெரிக்க அதிபர் கண்டனம்!

ஈரான் அரசாங்கத்திற்கு அமெரிக்க அதிபர் கண்டனம்!

ஈரானில் அந்நாட்டு மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை கேட்டும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியும் போராடி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அமைதியான முறையில் போராடிவரும் மக்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.இந்நிலையில் அமைதி வழியில் போராடி வரும் ஈரான் மக்களை அந்நாட்டு அரசு கைது செய்து வருவதற்கு அமெரிக்கா இன்று கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொண்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ஹெதர் நாவர்ட்,

”ஈரானின் நடைபெற்றுவரும் போராட்டங்காளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஈரான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு ஊழலை முடிவுக்கு கொண்டுவர அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

மேலும்,” உயர்ந்த வரலாறு மற்றும் கலாச்சாரம் கொண்ட செல்வ செழிப்புடன் இருந்த அந்த நாட்டை, பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையை எட்டும்படி ஈரான் தலைவர்கள் செய்துவிட்டனர். அவர்களது முக்கிய பணி வன்முறை, குழப்பம், கலவரம், மக்களை குருதி சிந்த வைத்தல் போன்றவைகளாக இருந்தது” என்று ஹெதர் சாடினார்.

மக்கள் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்

இதேபோல் வெள்ளை மாளிகைச் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ”ஈரானில் நிகழும் இந்த போராட்டங்களை உலக நாடுகள் அனைத்துமே பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஈரான் அரசாங்கம் மக்களின் உரிமைக்கு மதிப்பளிக்கவேண்டும். அங்கு நடக்கும் போராட்டத்தை வெளிப்படுத்த தடையாக இருக்கக்கூடாது” என்று கூறினார்.

இதனிடையே அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு அந் நாட்டு அரசு மதிப்பளிக்க வேண்டும். உலகம் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஈரானில் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதையடுத்து மக்கள் பல இடங்களில் மக்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்தப் போராட்டம் ஹமடன், இஸ்பாஹன், கெர்மன்ஷா ஆகிய நகரங்களில் போராட்டம் பரவியுள்ளது. இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரானில் நடைபெறும் போராட்டம் குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஈரானிய மக்கள் அமைதியான முறையில் ஊழல் மற்றும் தீவிரவாதத்துக்கு உதவி செய்யும் அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் அரசு தங்களது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். உலகம் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நவீன ஏவுகணை ஒன்றைச் சோதித்துப் பார்த்தது என்பதற்காக ஈரான் மீது புதிய தடைகளை விதித்திருக்கிறது அமெரிக்கா. மேலும் அந் நாட்டுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார்.

மேலும் ஏமனில் ஹவுத்தி தீவிரவாதிகளுக்கு ஈரான் நிதியுதவி அளித்து வருவதாக அமெரிக்காவும், சவுதியும் அந்நாட்டின் மீது குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts