மலாலா -வுக்கு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் இடம் கிடைச்சுடுச்சு!
பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமைப்போராளியும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரு மான மலாலா யூசப்சாய்க்கு (20 வயது) லண்டனில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்துள்ளது. தேர்வில் பல்கலைக்கழகத்தில் சேரத் தேவையான அளவுக்கு அவர் மதிப்பெண் பெற்றதால் அவருடைய இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

| மலாலா தத்துவம், அரசியல், பொருளாதாரம் பிரிவில் சேர்ந்து பயில உள்ளார். இந்தப் பிரிவு பிரபல அரசியல்வாதிகள், முக்கியத் தலைவர்கள் விரும்பி தேர்வு செய்வது ஆகும். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ இந்தப் பிரிவில் சேர்ந்து பயின்ற தலைவர்களில் முக்கியமானவர் ஆவார். மியான்மர் தலைவர் ஆங் சான் சூ கி, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோரும் இந்தப் பிரிவில் சேர்ந்து பயின்றவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். |
தற்போது லண்டனில் வசிக்கும் மலாலா ஐ.நா.வுக்கான நல்லெண்ண தூதராக உள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்திருப்பது குறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். மலாலாவின் தந்தை ஸியாதின் யூசப்சாயும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


