சவுதியில் இளவரசர் ஆட்சி!

சவுதியில் இளவரசர் ஆட்சி!

சவுதியில் மன்னராக இருப்பவர் சாலமன். சமீபத்தில் இளவரசாக இருந்த முகமது பின் நயப்பை அதிரடியாக நீக்கினார். தொடர்ந்து தனது மகன் முகமது பின் சாலமனை(32) இளவரசராக முடிசூட்டினார். இந்த அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மன்னர் குடும்பத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் சவுதி மன்னர் சாலமன் திடீரென நேற்று முன்தினம் விடுமுறையில் சென்றார். அவருக்கு பதிலாக அவரது மகன் இளவரசர் முகமது பின் சாலமனிடம் அனைத்து பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு சென்றார். தற்போது சவுதி அரசு நிர்வாகம் இளவரசர் முகமது பின் சாலமன் வழிகாட்டுதலின்படி நடந்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதியில் மன்னர் வெளிநாட்டு பயணம் அல்லது விடுமுறையில் செல்லும் போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மன்னர் குடும்பத்தினரிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பது வழக்கம். மன்னர் விடுமுறையில் சென்ற போது இளவரசரிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பது இதுவே முதல்முறை.இதனிடையே மன்னர் சாமலன் மொராக்கா சென்றிருப்பதாகவும், அவர் எப்போது நாடு திரும்புவார் என்ற தகவல் தெரியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.