மிஸ் யுனிவர்ஸ்:2013 பட்டத்தை வென்றார் வெனிசுலா கேப்ரியேலா இஸ்லர்!
ரஷ்யாவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 25 வயதான வெனிசுலா நாட்டு அழகி கேப்ரிலா இஸ்லர் தேர்வானார். இவர் வெனிசுலாவில் டி.வி., தொகுப்பாளினியாக இருந்தவர்.

பிரபஞ்சத்தின் சிறந்த அழகியை தேர்வு செய்யும் ‘மிஸ் யூனிவர்ஸ்-2013’ போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது.இந்திய அழகியாக தேர்வான மானசி மோகே உள்பட 86 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
பல நாடுகளை சேர்ந்த பல்துறை பிரபலங்கள் நடுவர்களாக பங்கேற்ற இந்த 62வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ‘மிஸ் வெனிசுலா’ பட்டம் வென்ற கேப்ரியேலா இஸ்லர்(25) சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெனிசுலா நாட்டின் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் அவருக்கு கடந்த ஆண்டு இதே பட்டத்தை வென்ற அமெரிக்காவின் ஒலிவியா கல்ப்போ அழகிக்கான மகுடத்தை சூட்டி மகிழ்வித்தார்.இதை உலகம் முழுவதும் 10லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
Venezuelan Crowned Miss Universe 2013
************************************************
A Venezuelan television host beamed as she was crowned Miss Universe 2013 on Saturday, marking the seventh contest win for the South American country.


