இரட்டை இலை விவகாரம் ; டி டி வி தினகரன் இன்று கைது?
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணியாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற, சசிகலா அக்கா மகன் தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி பேரம் நடத்தினாராம் பணத்தை கைமாற்ற, டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்த சுகேஷ் சந்திரசேகரை, கடந்த 17-ம் தேதி டில்லி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, சுகேஷிடம் நடத்திய விசாரணையில்தான் ‘இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் முடிவு செய்தனர். விசாரணைக்காக, சனிக்கிழமை (நேற்றுமுன்தினம்) நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி போலீஸ் சம்மன் அளித்தனர். அதன்படி நேற்று முன்தினம் தினகரன் டெல்லியில் நேரில் ஆஜர் ஆனார். அவரை தனி அறையில் வைத்து, உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத், துணை கமிஷனர் மதுர் வர்மா, இன்ஸ்பெக்டர்கள் நரேந்திர ஷாகல், ரித்தேஷ் சிங் ஆகியோர் 7 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
சுகேஷ் சந்திரசேகருக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு, பணப் பரிமாற்றம், தேர்தல் கமிஷனில் உள்ள அதிகாரிகள் யாருடனாவது தொடர்பு வைத்து இருந்தாரா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு 10 மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 1 மணி வரை நடைபெற்றது.
பின்பு தினகரனை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் அவரது உதவியாளர் ஜனார்த்தன் ஆகியோரை டில்லி போலீசார் மதியம் 2 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
விசாரணை குறித்து நம்மிடம் பேசிய தேர்தச்ல் கமிஷன் அதிகாரி ஒருவர், “ தினகரன் ப?ணம் கொடுத்ததற்கான முகாந்திரம் கிடைத்து விட்டது, அதை அவர் வாயிலிருந்து வெளிக் கொணர முயற்சித்து வருகிறோம். இன்று அது நடந்து விடும் என்றும் அதையடுத்து அவர் அரெஸ்ட் ஆக வாய்ப்புள்ளது: என்றும் தெரிவித்தார்


