மது விற்பனையை நடத்துவது என்பது அடிப்படை உரிமை ஆகாது.- சுப்ரீம் கோர்ட் சுரீர்

மது விற்பனையை நடத்துவது என்பது அடிப்படை உரிமை ஆகாது.- சுப்ரீம் கோர்ட் சுரீர்

நெடுஞ்சாலைகளில் மதுபானம் விற்கத் தடை விதிக்கப்பட்டதால் எங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம் என்று ஓட்டல்கள் சங்கம் கூறியதை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. மதுபானம் விற்பது ஒன்றும் ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

highway apr 6

சாலைவிபத்துகளுக்கு காரணமே மது அருந்து விட்டு வாகனம்ஓட்டுவது தான். எனவே தேசியநெடுஞ்சாலைகளை ஒட்டி உள்ள மதுபானக் கடைகளை மூடி விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில்  மட்டுமல்ல, 5 நட்சத்திர ஓட்டல்களிலும் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.  இதனால் ஓட்டல் தொழிலில் பேரிழப்பு ஏற்படுகிறது என்று ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரெண்டுகள், மனமகிழ் மன்றங்கள் முறையிட்டுள்ளன.  உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரியது.

இந்த மனுவை தலைமை நீதிபதி கேகர்  தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.  அப்போது நீதிபதிகள், “மதுபானம் விற்பது என்பது மாநில அரசுகளின் உரிமை ஆகும்.  அதே சமயத்தில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் இருந்து  சாலையில் பயணிப்போரை பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் அவசியம் ஆகிறது. மது விற்பனையை நடத்துவது என்பது அடிப்படை உரிமை ஆகாது.  அதற்கு உரிமம் பெறுவதும் தனிநபரின் உரிமையும் அல்ல.  அரசியல்சாசனப் படி, மது விற்க உரிமை கோரவும் முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலனை கருதித்தான் டிசம்பர் 15ம் தேதி நெடுஞ்சாலைகளில் மது விற்க தடை செய்யப்பட்டது. எனவே அதை மறுபரிசீலனை செய்ய முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் கருத்துதெரிவித்தனர்.