தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் – கூடுதலாக கவர்னர் பணியை செய்தார்!

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் – கூடுதலாக கவர்னர் பணியை செய்தார்!

நாட்டின் 68வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே அரசு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டும் காந்தி சிலை அருகே இன்று குடியரசு தின விழா நடைபெற்றது. வழக்கமாக, சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் முதல்வரும் குடியரசு தின விழாவில் மெரினா கடற்கரையில் ஆளுநரும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வர். விருதுகளையும் பதக்கங்களையும் முதல்வர் வழங்குவார். ஆனால், தற்போது தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார். எனவே, தமிழகத்தில் முதல் முறையாக குடியரசு தினத்தில் முதல்வர் கொடியேற்றியிருக்கிறார்.

ops jan 26a

முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் 2-வது குடியரசு தின விழா இதுவாகும். கடந்த 2015-ம் ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் ஆளுநர் ரோசய்யா கொடியேற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது சொத்துக் குவிப்பு வழக்கு தண்டனை காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்திருந்தார். அவருக்கு பதில் முதல்வராக பதவியேற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கிய நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத நிகழ்வாக தேசியக்கொடியை முதல்-அமைச்சர் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக போர் நினைவுச் சின்னத்திற்கு சென்ற முதலமைச்சர், உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து முப்படைத் தளபதிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். குடியரசு தின நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து தொடர்ந்து முப்படையினரின் பீரங்கி, சிறிய போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் போன்றவை ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. தமிழக போலீஸ் பிரிவுகளின் அணிவகுப்பு, தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

16265220_1323191654394236_765908254683301832_n

குடியரசு தின விழாவையொட்டி கடற்கரை சாலை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் வன்முறை ஏற்பட்டதால் குடியரசு தினவிழாவின்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Posts