தயாரிப்பாளர் சங்கத் தலைவர் குஷ்பு அல்லது டி. ஆர் அல்லது,,? – மார்ச் 8ல் தெரியும்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் குஷ்பு அல்லது டி. ஆர் அல்லது,,? – மார்ச் 8ல் தெரியும்

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரனை தேர்தல் அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. அவர் சென்னையிலுள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று தயாரிப்பாளர்களை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

pro cou jan 26

பின்னர் தேர்தல் அதிகாரி ராஜேஷ்வரன் நிருபர்களிடம், “தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மார்ச் 5-ந்தேதி தேர்தல் நடத்தப்படும். சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

தலைவர் பதவிக்கு ஒருவரும், 2 துணை தலைவர்களும், 2 செயலாளர்களும், ஒரு பொருளாளரும், 21 செயற்குழு உறுப்பினர்களும் இந்த தேர்தலில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை (27-ந்தேதி) முதல் பிப்ரவரி 3-ந்தேதி வரை சங்க அலுவலகத்தில் வழங்கப்படும்.

வேட்பு மனுக்களை வருகிற 30-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம். 4-ந் தேதி மாலை மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். பிப்ரவரி 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். இறுதி வேட்பாளர்கள் பட்டியல் பிப்ரவரி 8-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். வேட்பாளர்கள் கட்டணமாக தலைவர் பதவிக்கு ரூ.1 லட்சமும், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் பதவிக்கு ரூ.50 ஆயிரமும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் நீக்கத்துக்கு கோர்ட்டில் தடை வாங்கி வந்தால் ஓட்டு போடுவதற்கோ அல்லது தேர்தலில் நிற்பதற்கோ அனுமதிக்கப்படுவார்” இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. மேலும் 2 துணைத்தலைவர்கள், 2 செயலாளர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் விஷால் அணியினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது.

தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தரும் போட்டியிடுகிறார். அவரது அணிசார்பில் துணை தலைவர்கள் பதவிக்கு ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன் ஆகியோரும், செயலாளர்கள் பதவிக்கு கேயார், கதிரேசன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு எஸ்.வி.சேகரும் போட்டியிடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது செயலாளர் பொறுப்பில் இருக்கும் ராதாகிருஷ்ணனும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவரது அணியில் செயலாளர்கள் பதவிக்கு மன்னன், சிவசக்தி பாண்டியன், ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு நடிகை தேவயானியும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது

Related Posts

error: Content is protected !!