ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு- புதிய நீதிபதி நியமனம்!
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வுபெற்றதை தொடர்ந்து, புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு கர்நாடக அரசு வரும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்ட நிலையில் இவ்வழக்கை இனிமேல் ஜான் மைக்கேல் குன்ஹா விசாரிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


