தனுஷ்-ன் விஐபி – 2 – பட ஷூட்டிங்கை க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார் ரஜினி!

தனுஷ்-ன் விஐபி – 2 – பட ஷூட்டிங்கை க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார் ரஜினி!

தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. அமலாபால், விவேக், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை வேல்ராஜ் இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தனுஷ் தயாரானார்.

vip dec 15a

இப்படத்துக்கு கதை, வசனத்தை தனுஷ் எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். அனிருத் மற்றும் ஷான் ரோல்டன் இருவருமே இசையமைக்க இருக்கிறார்கள். முதல் பாகத்தில் அனிருத் அளித்த சில பின்னணி இசைக் கோர்ப்புகளை மட்டும் 2-ம் பாகத்தில் இடம்பெறவிருப்பதால், அவருடைய பெயர் இசையமைப்பாளர் பெயரில் இடம்பெற்றுள்ளது.

இயக்குநர் சமுத்திரக்கனி, அமலாபால், விவேக் என முதல் பாகத்தில் உள்ள நடிகர்கள், 2ம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். முதல் பாக முடிவிலிருந்து, 2-ம் பாகம் துவங்குவது போன்று கதை எழுதியிருக்கிறார் தனுஷ். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவிருக்கிறது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட்டது. இந்த படப்பிடிப்பை நடிகரும், தனுஷின் மாமானாருமான ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். மேலும், தனுஷுக்கு மாலை அணிவித்து அவருக்கு வாழ்த்துக்களையும் கூறினார். இந்த படப்பிடிப்பில் நடிகை அமலாபால், விவேக், சரண்யா பொன்வண்ணன், சௌந்தர்யா ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அத்துடன், “‘வேலையில்லா பட்டதாரி 2’ படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ரஜினி. இதற்கு படக்குழுவினர் அனைவரும் தங்களுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார்கள்.

Related Posts