கல்விக் கடனுக்கு லஞ்சம்: சென்ட்ரல் பேங்க் மேனேஜர் கைது

கல்விக் கடனுக்கு லஞ்சம்: சென்ட்ரல் பேங்க் மேனேஜர் கைது

ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியா புரம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பாலுச்சாமி என்பவர் தன் மகள் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்காக கடன் கேட்டிருந்தார்.அந்த கல்வி கடன் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட முத்துக்குமாரை இன்று சீ பி ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
25 - central bank
தேனி மாவட்டம் அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் பாலுச்சாமி. இவரது மகள் நர்சிங் படிப்பதற்கென வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினார் மேனேஜர் முத்துக்குமார். இதற்கிடையில் கடன் கிடைக்க வேண்டுமானால் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றார். இதையடுத்து பேரம் பேசி ரூ. 7 ஆயிரம் ஆனது. இதற்கு சம்மதித்த பாலுச்சாமி மேனேஜரின் பேரம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். உடனே இந்த புகாரை சி.பி.ஐ.,க்கு பரிந்துரை செய்தனர்.

இதனையடுத்து சி பி ஐ திட்டப்படி பாலுச்சாமி பணத்தை ரத்னாநகரில் உள்ள மேனேஜர் வீட்டு அருகே கொண்டு கொடுத்தார் அப்போது மறைந்திருந்த சி.பி.ஐ.,போலீசார் கையும் களவுமாக பாங்க்., மேலாளர் முத்துக்குமாரை கைது செய்தனர். முறையான விசாரணையைத் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Posts