வேர்ல்ட் ஃபேமஸ் சைக்கிள் ரிட்லி இங்கே கிடைக்கும்! – விலை ஜஸ்ட் 25 ஆயிரம் முதல் ஏழு லட்சம் மட்டுமே!.!

வேர்ல்ட் ஃபேமஸ் சைக்கிள்  ரிட்லி இங்கே கிடைக்கும்! – விலை ஜஸ்ட் 25 ஆயிரம் முதல் ஏழு லட்சம் மட்டுமே!.!

இந்தியாவில் சைக்கிள்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் டிஐ சைக்கிள்ஸ் நிறுவனம், இன்று இந்திய சந்தையில் உலகப்புகழ் பெற்ற பெல்ஜிய நிறுவனமான ரிட்லி பிராண்ட் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சைக்கிள் பிரியர்களுக்கென்றே உலகத் தரத்தில் உள்ள சைக்கிள்களை கொண்டு செல்லும் நோக்கத்தோடுதான் இதை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இந்திய விற்பனைக்காக பிரத்யேகமாக மொத்தம் 11 மாடல் சைக்கிள்களை ரிட்லி நிறுவனம் வடிவமைத்து இதனுடைய ஆரம்ப விலை 25,000 ரூபாய். 80,000 ரூபாய் வரையும் ‘பிரீ­மியம்’ சைக்கிள், 63 ஆயி­ரத்தில் இருந்து, 7.80 லட்சம் ரூபாய்க்கு சைக்கிள்கள் இருக்கிறது என்றும் இந்த சூப்பர் பிரீமியம் சைக்கிள்கள் ட்ராக் அண்ட் டிரெய்ல் ஸ்போர்ட்ஸ் ஸ்டோர் மற்றும் சிக்லோ கபே போன்ற விற்பனையகங்களில் கிடைக்கும். அல்லது ஆன்லைன் மூலமாக இந்த சைக்கிள்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்கள்.
cycle apr 24
இப்போதெல்லாம் டூவிலர்,கார் வைத்திருப்பது தேவை என்ற நிலையில் மாறி கவுரவ பிரச்சனையாக மாறிவிட்டது. டூவிலர்,கார் என்ப வை தமிழகத்தை பொறுத்தவரை ஒருவரின் கவுரவத்தை எடைபோடும் பொருளாகவே மாறி விட்டது.ஆனால்உலகின் பல நகரங்கள் சிறு தூரப் போக்குவரத்திற்கு சைக்கிள்களுக்கு மாறத் தொடங்கியுள்ளன. இதனால் அந்த நகரங்களில் சாலையில் செல்வது எளிதாகி இருக் கிறது. சாலையில் செல்வதில் உள்ள மகிழ்ச்சியையும் வசதியையும் மக்கள் மீண்டும் அடையத் தொடங்கியுள்ளனர். சாலை நெருக்கடியும் சுற்றுப்புறம் மாசுபடுவதும் குறைந்துள்ளது. ஆக.. சைக்கிள்களுக்குத் திரும்புவதென்பது கடந்த சில ஆண்டுடு காலத்தில் நடைபெற்றுள்ள உலக நகரங்களின் வரலாற்றில் அற்புதமான திருப்பம்.

ஆனால் இந்திய நகரங்களோ சைக்கிள் பயண மீட்சியைத் தொடங்குவது பற்றிய எந்தத் திட்டமுமின்றி இருக்கின்றன. உலகின் பல நாடு களில் அதன் வெற்றி கண்கூடாகத் தெரிந்த பிறகும் இந்திய நகரங்கள் அதைக் கண்டு கொள்வதாக இல்லை. இதன் பாதிப்பு நம் எல்லோருக்கும்தான். இத்தனைக்கும் சைக்கிள் ஒன்றும் இந்தியாவுக்குப் புதிய வாகனம் அல்ல. மக்கள் பரவலாகப் பயன்படுத்தி வந்த வாகனம்தான். 1994 வரை நகரப் போக்குவரத்தில் 30 சதவீதம் சைக்கிள்கள் மூலமாகவேதான் இங்கே நடந்தது. இந்த நல்ல அம்சத்தை நகர முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, போக்குவரத்துக் கொள்கை வகுப்போர் மோட்டார் வாகனங் களை தனியார் உபயோகத்திற்குக் கொண்டுவருவதிலேயே முனைப்பாக இருந்தனர். விளைவு என்ன? சாலைகளி லிருந்து சைக்கிள்கள் விரட்டியடிக்கப்பட்டன.

இத்தனைக்கும் இந்தியப் பெரு நகரங்களில் மெல்ல நகரும் மோட்டார் வாகனங்களின் வேகத்தை விட சைக்கிள்களில் வேகமாகப் பயணித்துவிட முடியும். கார்பன் வெளியீடுகளில் 80 சதவீதம் நகரங்களிலிருந்து கிளம்பும் மாசுகளிலிருந்துதான். சைக்கிள் உபயோகத்தை அதி கரிப்பது கார்பன் வெளியீடுகளைக் கணிசமாகக் குறைத்துவிடும். காற்று மாசுபடுதல் குறைவது மக்களின் உடல்நலத்திற்கு நல்லது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இந்நிலையில்தான் இந்தியாவுக்கு என்ற பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள்கள் உட்பட பலவகை சைக்கிள்களையும் ரிட்லிபைக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜோகிம் ஏர்ட்ஸ் (Mr. Joachim Aerts), மற்றும் டியூப் இன்ஸ் வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு எல்.ராம்குமார் ஆகியோர், டிஐ சைக்கிள்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் திரு.அருண் அழகப்பன், ரிட்லி பைக்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் திரு. ரிச்சர்டு கிரைக் விட்டன்பெர்க் (Mr. Richard Craig Wittenberg) ஆகியோர் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தனர்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிஐ சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கும் ரிட்லி பைக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ரிட்லி நிறுவனத்தின் பல்வேறு சைக்கிள்கள் மீதான லைசென்ஸ் உரிமம் தொடர்பான ஓப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து இந்த நிகழ்ச்சி நடை பெறுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, டிஐ சைக்கிள்ஸ் நிறுவனம், இந்தியா சந்தையில் தனக்குள்ள முதன்மையிடத்தின் அடிப்படையில், உலகத்தரம் வாய்ந்த சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் வகையில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ரிட்லி சைக்கிள்களுக்கான சந்தை வாய்ப்புகளை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மற்றும் மியான்மார் ஆகியநாடுகளில் அடுத்த33 ஆண்டுகளுக்கு ஏற்படுத்தி தரும்.

நிகழ்ச்சியில் பேசிய ரிட்லி பைக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜோகிம் ஏர்ட்ஸ், “இந்திய சந்தை குறித்து தெளிவான மற்றும் முற்போக்கான அணுகுமுறையை கொண்டுள்ள டிஐ சைக்கிள் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் ரிட்லி சைக்கிள்களை அறிமுகப் படுத்துவது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய நுகர்வோருக்கு ஏற்ற வகையிலான சைக்கிள்களை அறிமுகப்படுத்தி நாங்கள் வளர்ச்சியை நோக்கி முன்னேறுவோம். எங்களது கூட்டுமுயற்சியினால் ரிட்லியை இந்தியாவில் ஒரு முன்னணி சைக்கிள் பிராண்டாக நிலைநாட்ட முயற்சி கொண்டுள்ளோம்’ என்று அவர் தெரிவித்தார்.

டியூப் இன்ஸ்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இயக்குநர் திரு. எல்.ராம்குமார் பேசுகையில் “உலகில் சிறந்த சைக்கிள்களை இந்திய நுகர்வோருக்கு புதுமையான மற்றும் சிறந்த தொழில்நுட்பத்தை அளிப்பதிலே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்’’ என்றார்.

டிஐ சைக்கிள் நிறுவனத்தின் தலைவர் திரு.அருண் அழகப்பன் பேசுகையில், “சைக்கிள்கள் வடிவமைப்பதில் புதுமைகள் நிகழ்த்துவதில் ரிட்லி உண்மையிலேயே சிறந்த நிறுவனமாகும். சைக்கிள்கள் குறித்த புதிய அனுபத்தை எங்களது இந்திய நுகர்வோருக்கு அளிக்க அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவுக்கு நாங்கள் கொண்டுவந்திருக்கிறோம். சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எல்லா வசதிகளும் இருக்கும் வகையில் அதனை வடிவமைப்பதையே சிறப்பம்சமாகக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவுக்கு கொண்டுவந்திருப்பதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த பொருட்களை இந்திய சைக்கிள் பிரியர்கள் அடைய வழிவகுத்துள்ளோம்’’ என்றார்.

ரிட்லி பைக்ஸ் மற்றும் டி ஐ சைக்கிள் நிறுவனத்திற்கு இடையிலான பிராண்ட் லைசென்ஸ் ஒப்பந்தம் இந்தியாவில் பிரீமியம் சைக்கிள்கள் சந்தையில் டிஐ சைக்கிள் நிறுவனத்தின் பங்கை வலுப்படுத்தி, இந்தியாவில் உள்ள சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகள் செய்து தர இயலும். சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

இந்த சூப்பர் பிரிமீயம் சைக்கிள்கள் ட்ராக் அண்ட் டிரைல் (Track & Trail) ஸ்போர்ட்ஸ் ஸ்டோர் மற்றும் சிக்லோ கஃபே விற்பனை நிலையங்கள், மற்றும் பல வகையான விற்பனையிடங்களில் கிடைக்கும். உலகப்புகழ்பெற்ற சைக்கிள் பிராண்டுகளான பியான்சி, கேனோன்டேல், ஜிடி, ஷ்வின், மங்கூஸ் மற்றும் மோன்ட்ரா ஆகியவற்றுடன் ரிட்லி சைக்கிள்களும் சேர்த்து கொண்டுவருவதால் சூப்பர் பிரிமீயம் சைக்கிள் சந்தையில் டிஐ சைக்கிள் நிறுவனம் தனது நிலையை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Related Posts