‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தின் சிங்கிள் ட்ராக்!

‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தின் சிங்கிள்   ட்ராக்!

மலையாள திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘தட்டத்தின் மறையத்து’.இப்படம் தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என ரீமேக் செய்யப்படுகிறது. SVD ஜெயச்சந்திரன் வழங்கும் இப்படத்தினை மித்ரன் R ஜவஹர் இயக்குகிறார். அறிமுக நாயகன் ‘வால்டர் பிலிப்ஸ்’ கதாநாயகனாகவும்,மலையாளத்தில் இந்த படத்தின் நாயகியாக நடித்த ‘இஷா தல்வார்’ இதிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் நடுத்தர வர்க்கத்து இந்துப் பையன் வசதியான முஸ்லிம் பெண்ணை விரும்புகிறான். அவர்களுக்கிடையே அரும்பும் காதல் , இருவரும் ஒன்று சேர வரும் எதிர்ப்புகள், தடைகள் பற்றியது தான் கதைக்களம்.கன்னியாகுமாரியில் தான் கதைக்களம் நடக்கிறது என்றாலும் சென்னை, கோவை, கேரளா, தலச்சேரி போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது
f565d964-c1d7-4159-8557-62022df4a8f8
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் பாடலாசிரியர் அருண் காமராஜ் எழுதிய “மைபோட்டு மைபோட்டு”எனும் பாடல் ,ஏப்ரல்1ம் தேதி வெளியாக இருக் கிறது.இப்பாடல் திருமணச்சடங்கின் போது பாடப்படுவதாக அமைந்திருக்கிறது. இப்பாடலில் நிறைய பாடகர்கள் பாடியிருப்பதாக இசை அமைப்பாளர் தெரிவித்தார். “ஆடுகளம்” படத்தின் ‘ஒத்த சொல்லால’ பாடல் புகழ், வேல்முருகனும் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார். இது அவரது முதல் மெலோடிப் பாடல். இப்பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார்.

இதுப் பற்றி அவர் பேசும்போது; படத்தின் நாயகன் வால்டர், தனது சகோதரியின் நடனப்பள்ளியில் படித்து வரும்போதிலிருந்தே தனக்கு தெரியும் என்றும், கேரளாவில் படப்பிடிப்புசெய்யப்பட்ட இந்தப் பாடல் மிக அருமையாக வந்திருப்பதாகவும் கூறினார்.கலைப்புலி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தினை உலகமெங்கும் வெளியிடுகின்றது.

Related Posts